இந்தியாவில் Intel Core Microsoft Surface Pro லேப்டாப் அறிமுகம்.

இந்தியாவில்  Intel  Core Microsoft Surface Pro  லேப்டாப் அறிமுகம்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்தியாவில் சர்ஃபேஸ் ப்ரோ 7 லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய சர்ஃபேஸ் ப்ரோ 7 மாடலில் பிக்சல்சென்ஸ் டிஸ்ப்ளே, 10-ம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்புடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சர்ஃபேஸ் ப்ரோ எக்ஸ் மாடலையும் அறிமுகம் செய்தது. இதில் மைக்ரோசாஃப்ட் எஸ்.கியூ.1 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 7 சிறப்பம்சங்கள்:

– 12.3- இன்ச் பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளே 2736×1824 பிக்சல்
– சர்ஃபேஸ் பென்
– குவாட்கோர் 10-ம் தலைமுறை இன்டெல் கோர் ஐ7-1065G7 பிராசஸர்
–  கோர் ஐ3 மாடலில் இன்டெல் யு.ஹெச்.டி. கிராஃபிக்ஸ்
– கோர் ஐ5 மற்றும் ஐ7 மாடல்களில் இன்டெல் ஐரிஸ் பிளஸ் கிராஃபிக்ஸ்
– அதிகபட்சம் 16 ஜி.பி. LPDDR4X ரேம், அதிகபட்சம் 256 ஜி.பி. SSD
– 8 எம்.பி. பிரைமரி கேமரா, 1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. வீடியோ ரெக்கார்டிங்
– 5 எம்.பி. செல்ஃபி கேமரா, 1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. வீடியோ ரெக்கார்டிங்
– 1.6 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ பிரீமியம், டூயல் ஃபார் ஃபீல்டு ஸ்டூடியோ மைக்
– வைபை 6 a/b/g/n/ac/ax, ப்ளூடூத் 5.0 LE
– யு.எஸ்.பி. டைப்-ஏ, யு.எஸ்.பி. டைப்-சி
– 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், மினி டிஸ்ப்ளே போர்ட்
– சர்ஃபேஸ் கனெக்ட், சர்ஃபேஸ் டைப் கவர் போர்ட்
– மைக்ரோ எஸ்.டி.எக்ஸ்.சி. கார்டு ரீடர்
– 13 மணி நேர பேட்டரி பேக்கப்
– பிளாட்டினம், மேட் பிளாக் நிறங்கள்

சிறப்பம்சங்களை பொருத்தவரை சர்ஃபேஸ் ப்ரோ 7 மாடலில் 12.3 இன்ச் பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளே, 2736×1824 பிக்சல் 10 பாயிண்ட் மல்டிடச் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 10-ம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர், இன்டெல் ஐரிஸ் பிளஸ் / இன்டெல் யு.ஹெச்.டி. கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

மெமரியை பொருத்தவரை 4 ஜி.பி. / 8 ஜி.பி. / 16 ஜி.பி. LPDDR4X ரேம், 128 / 256 / 512 அல்லது 1000 ஜி.பி. எஸ்.எஸ்.டி. வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சர்ஃபேஸ் பென், வைபை 6, ப்ளூடூத் 5.0 எல்.இ. தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதிலுள்ள பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 10.5 மணி நேர பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட சர்ஃபேஸ் ப்ரோ 7 பல்வேறு ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் இந்தியாவில் தற்சமயம் அறிமுகமாகி இருக்கிறது. சர்ஃபேஸ் ப்ரோ 7 இன்டெல் கோர் ஐ7 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மற்றும் 16 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரிக்களில் கிடைக்கிறது.

விலை மற்றும் விற்பனை :

இன்டெல் கோர் ஐ3 10-ம் தலைமுறை 4 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி. எஸ்.எஸ்.டி. விலை ரூ. 70,990
இன்டெல் கோர் ஐ5 10-ம் தலைமுறை 8 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி. எஸ்.எஸ்.டி. விலை ரூ. 85,990
இன்டெல் கோர் ஐ5 10-ம் தலைமுறை 8 ஜி.பி. ரேம் + 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி. விலை ரூ. 1,13,990
இன்டெல் கோர் ஐ7 10-ம் தலைமுறை 16 ஜி.பி. ரேம் + 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி. விலை ரூ. 1,37,990

அக்சஸரீக்கள்

மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 7 சிக்னேச்சர் டைப் கவர் ரூ. 15,389
மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் பென் ரூ. 9139
மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ஆர்க் மவுஸ் ரூ. 6950
மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் டாக் ரூ. 18,890

அனைத்து வேரியண்ட்களும் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo