50 கோடி ஐபோன் பயனர்களை பாதித்த பிழை சரி செய்ய ஆப்பிள் அறிவிப்பு.

HIGHLIGHTS

சமீபத்திய ஐஒஎஸ் இயங்குதளம் கொண்டிருந்த ஐபோன்களில் இருந்தும் ஹேக்கர்கள் தகவல்களை திருட இந்த பிழை வழி வகுத்து இருக்கிறது.

50 கோடி ஐபோன் பயனர்களை பாதித்த பிழை சரி செய்ய ஆப்பிள் அறிவிப்பு.

உலகளவில் கிட்டத்தட்ட 50 கோடி ஐபோன் பயனர்களை பாதித்த பிழை ஒன்றை சரி செய்வதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. இந்த பிழையை சான்ஃபிரான்சிஸ்கோவை சேர்ந்த மொபைல் பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் கண்டறிந்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஐபோன் மட்டுமின்றி ஐபேட்களிலும் இந்த பிழை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் மற்றும் ஐபேட்களில் உள்ள மெயில் செயலியில் கண்டறியப்பட்டு இருக்கும் பிழையை ஏற்படுத்த ஹேக்கர்கள் ஆறு சைபர்செக்யூரிட்டி சோதனைகளை முறியடித்து இருப்பதாக ஆய்வு நிறுவன அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.

சமீபத்திய ஐஒஎஸ் இயங்குதளம் கொண்டிருந்த ஐபோன்களில் இருந்தும் ஹேக்கர்கள் தகவல்களை திருட இந்த பிழை வழி வகுத்து இருக்கிறது. இந்த பிழை மெயில் செயலியை இயக்கி வந்த அனைத்து விவரங்களையும் ஹேக்கர்களுக்கு வழங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.

மெயில் செயலியில் உள்ள பிழை ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை பாதித்து இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான தீர்வு தயார்படுத்தப்பட்டு இருக்கிறது. விரைவில் இதற்கான அப்டேட் உலகளவில் வெளியிடப்படும் என ஆப்பிள் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile