இன்ஸ்டாகிராமில் வருகிறது அசத்தலான அம்சம்,ரீல்ஸில் வருகிறது புதிய அப்டேட்.

HIGHLIGHTS

மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலி மற்றொரு புதிய அம்சத்தை அறிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரீமிக்ஸ் செய்ய புதிய கருவிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு கடந்த 2020-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலி மற்றொரு புதிய அம்சத்தை அறிவித்துள்ளது. இந்த அம்சத்தின்படி, இப்போது 15 நிமிடங்களுக்கு குறைவான வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட முடியும். மேலும், இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரீமிக்ஸ் செய்ய புதிய கருவிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு கடந்த 2020-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டிக்டாக்கிற்கு மாற்றான இந்திய செயலிகள் பிளே ஸ்டோரில் பிரபலமாகி வருகின்றன. அந்த வகையில் ஃபேஸ்புக் நிறுவனமும் டிக்டாக் செயலிக்கு மாற்றாக தனது இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் அம்சத்தை வழங்கி வருகிறது.

15 நிமிடங்களுக்கு மேல் உள்ள வீடியோக்கள் மட்டுமே வீடியோ செக்‌ஷனில் இடம்பெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய அம்சம் இனி பதிவிடும் வீடியோக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஏற்கனவே உள்ள பழைய வீடியோக்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது சோதனை செய்யப்பட்டு வரும் இந்த அம்சம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

இந்த அம்சங்களும் விரைவில் கிடைக்கும்

வீடியோ மற்றும் போட்டோ  ஷேரிங் பயன்பாடான Instagram ஆனது புதிய ரீமிக்ஸ் கருவிகளிலும் புதிய டெம்ப்ளேட்டுகள் மற்றும் Reels வழங்கும் எடிட்டிங் கருவிகள் உட்பட வேலை செய்கிறது. இதனுடன், இன்ஸ்டாகிராம் ரீல்களில் வீடியோ வர்ணனைக்கான விருப்பமும் கிடைக்கும். விரைவில் இன்ஸ்டாகிராமில் உள்ள பயனர்கள் ஒரே நேரத்தில் முன் மற்றும் பின்புற கேமராக்களைப் பயன்படுத்தி வீடியோவைப் ரெக்கார்ட் செய்ய முடியும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :