அனைவரும் எளிதில் பயன்படுத்தக்கூடிய மெசேஜ் செயலியான வாட்ஸ்அப்பில் பல்வேறு எளிமையான ஆப்சன்கள் உள்ளன. அதனை எப்படி பயன்படுத்துவதென்று பலருக்கும் தெரிவதில்லை. உதாராணமாக கூறவேண்டும் என்றால், ஒருவர் நமக்கும் அனுப்பும் மெசேஜை படித்துவிட்டோமா? இல்லையா? என்பதை அவருடைய வாட்ஸ் அப் வழியாகவே தெரிந்து கொள்ள முடியும். ஒருவேளை மெசேஜ் படித்து அவருக்கு உரிய பதில் அனுப்ப வில்லை என்றால் இருவருக்கும் இடையில் தர்ம சங்கடமான நிலை ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.
இத்தகைய சூழல்களை தவிர்க்கவும், நமக்கு ரிசீவ்வான மெசேஜ்ஜை அனுப்பியவருக்கு தெரியாமல் படிக்கவும் சில வழிகள் உள்ளன. இந்த ஆப்சன்களைப் பயன்படுத்தி சில மணி நேரங்கள் எடுத்துக்கொண்டு பிறகு உரிய பதிலை அவருக்கு அனுப்ப முடியும். அப்போது, நீங்கள் எப்போது மெசேஜ் படித்தீர்கள் என்ற விவரம் அவருக்கு தெரியாது. அதற்கு உங்கள் வாட்ஸ் அப் செட்டிங்ஸிற்கு சென்று read receipts அல்லது blue ticks ஆப்சன்களை ஆஃப் செய்ய வேண்டும். இது எளிமையான செட்டிங்ஸை ஆக்டிவேட் செய்யும்போது, மெசேஜை நாம் படித்தாலும், எப்போதும் படித்தோம் என்ற விவரம் அவருக்கு காட்டாது. read receipts -ஐ நீங்கள் ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்றால் Accounts > Privacy> Turn off என்ற வழிமுறையை பின்பற்ற வேண்டும்.
இந்த வழிகள் இல்லாமலும் இன்னும் சில வழிகள் இருக்கின்றன. வாட்ஸ் அப் மெசேஜை ஓபன் செய்வதற்கு முன்பாக, உங்கள் செல்போனில் செட்டிங்ஸூக்கு சென்று ஏரோஃபிளேன் மோடை (Airplane Mode)-ஐ ஆக்டிவேட் செய்து விடுங்கள். பின்னர் வாட்ஸ்ப் மெசேஜை ஓபன் செய்து படித்துவிட்டு மீண்டும் ஏரோஃபிளேன் மோடை ஆன் செய்தீர்கள் என்றாலும், நீங்கள் மெசேஜை படிக்கவில்லை என்றே திரையில் காண்பிக்கும். இதற்கடுத்தபடியாக, லாஸ்ட் சீன் (Last Seen) என்ற ஆப்சனை ஆப் செய்து வைக்க வேண்டும்.
உங்கள் தொடர்பில் இருப்பவர்கள் அனைவருக்கும் நீங்கள் எப்போது மெசேஜ் படிக்கிறீர்கள் என்ற விவரம் தெரியாது. வாட்ஸ் ஆப்பில் இருக்கும் “unread” வசதியைப் பயன்படுத்தி குறிப்பிட்ட மெசேஜை, நீண்ட நேரம் கழித்து படித்துக்கொள்ளலாம். இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் ஒருவேளை நீங்கள் மெசேஜை படித்துவிட்டு unread செய்திருந்தால், மெசேஜ் அனுப்பியவருக்கு, நீங்கள் மெசேஜ் படித்துவிட்டீர்கள் என்பதைக் காட்டிவிடும். இதை கண்டுபிடிக்காமல் இருக்க இந்த வழியை பின்பற்றுங்கள்.
அதாவது, Go to Settings > Click on Account > Select Privacy என்ற வழிமுறையைப் பின்பற்றி இதனை ஆக்டிவேட் செய்யுங்கள்.