உங்கள் வைஃபை யாராவது திருடுகிறார்களா என்று எப்படி தெரிந்து கொள்வது?

HIGHLIGHTS

முதலில் உங்கள் வைஃபை இணைப்பை யாராவது திருடுகிறார்களா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும்

உங்கள் ரவுட்டரில் (Router) லாக்-இன் செய்ய ஒரு இன்டர்பேஸை திறக்க வேண்டும்

உங்கள் நெட்வொர்க்கைப் பாதுகாப்பானதாக மாற்ற, பின்வரும் வழிமுறைகளை செயல்படுத்தவும்.

முதலில் உங்கள் வைஃபை இணைப்பை யாராவது திருடுகிறார்களா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும், ஒருவேளை திருடினால், இதுபோன்ற மீறல்களை எதிர்காலத்தில் தவிர்க்க, உங்கள் நெட்வொர்க்கைப் பாதுகாப்பானதாக மாற்ற, பின்வரும் வழிமுறைகளை செயல்படுத்தவும்.

01. உங்கள் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட டிவைஸில், வெப் ப்ரவுஸரை திறந்து, பின்வரும் அட்ரெஸ்களை முயற்சிக்கவும்: 192.168.0.1 அல்லது 192.168.1.1 அல்லது 192.168.2.1, இவற்றில் ஒன்று உங்கள் ரவுட்டரில் (Router) லாக்-இன் செய்ய ஒரு இன்டர்பேஸை திறக்க வேண்டும். இவை எதுவும் வேலை செய்யவில்லை என்றால், உங்கள் லேப்டாப்பில் கமாண்ட் ப்ராம்ப்ட்டை(command prompt) திறந்து ipcofig /all என டைப் செய்து என்டர்-ஐ அழுத்தவும். டீபால்ட் கேட்வே ஆப்ஷனுக்கு அருகில் எழுதப்பட்டுள்ள அட்ரெஸ் தான் உங்கள் ரவுட்டரின் அட்ரெஸ் ஆகும்.

02. இப்போது யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்டை உள்ளிடவும். உங்கள் ரவுட்டரின் பாஸ்வேர்ட் என்னவென்று உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் வைஃபை ரவுட்டரில் உள்ள ஸ்டிக்கர்களைச் சரிபார்க்கவும் அல்லது உங்கள் ஐஎஸ்பி-யிடம் (ISP – இண்டர்நெட் சர்வீஸ் ப்ரொவைடர்) கேட்கவும். இன்னமும் ரவுட்டரின் பாஸ்வேர்ட் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் – கவலை வேண்டாம். கீழ்வரும் நான்காவது படியைப் பயன்படுத்தி உங்கள் வைஃபையை யாராவது திருடுகிறார்களா என்பதை நீங்கள் கண்டுபிடிக்கலாம்; ஆனால் அதை நிறுத்த முடியாது.

03. நீங்கள் லாக்-இன் ஆனதும், உங்கள் 'வைஃபை கிளையன்ட்ஸ் லிஸ்ட்" அல்லது "கனெக்டட் டிவைஸஸ்" ஆகியவற்றை பார்வையிடவும். அங்கே அடையாளம் தெரியாத கனெக்ஷன் ஏதேனும் உள்ளதா என்று பார்க்கவும்.

04. லாக்-இன் செய்ய முடியாத பட்சத்தில், கமாண்ட் ப்ராம்ப்டில் arp -a என தட்டச்சு செய்து என்டர்-ஐ அழுத்துவதன் மூலம் அடையாளம் தெரியாத கனெக்ஷன்களை கண்டறியலாம்.

உடனே, என்னுடைய வயர்லெஸ் கனெக்ஷன் எந்த வழியில் திருடப்படுகிறது என்பதை கண்டுபிடித்து விட்டேன் என்று பெருமூச்சு விட்டுக்கொள்ள வேண்டாம். இனிமேல் தான் முக்கியமான வேலைகளே உள்ளன. பின்வரும் நான்கு ஸ்டெப்களை பின்பற்றுவாதன் மூலம், உங்கள் வைஃபை உடன் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள டிவைஸ்களை அகற்றவும்:

01. டபுள்யூபிஏ2 (WPA2) செக்யூரிட்டியை எனேபிள் செய்யவும் :

உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்-ஐ உள்ளிட்ட பிறகு ரவுட்டர் கண்ட்ரோல் டாஷ்போர்ட்டிற்குள் (router control dashboard) என்று டபுள்யூபிஏ2 செக்யூரிட்டியை இயக்கவும்.

02. வலுவான ஒரு பாஸ்வேர்ட்-ஐ செட் செய்யவும்:

மேற்குறிப்பிட்ட அதே ரவுட்டர் கண்ட்ரோல் டாஷ்போர்ட்டைப் பயன்படுத்தி உங்கள் வைஃபை பாஸ்வேர்ட்-ஐ மாற்றலாம். உங்கள் பாஸ்வேர்ட்-ஐ மாற்றி, உங்கள் வைஃபையை ரீஸ்டார்ட் செய்வது, ஏற்கனவே கனெக்ட் செய்யப்பட்டுள்ள டிவைஸ்களை வெளியேற்றும்.

03. ரவுட்டரின் லாக்-இன் விவரங்களை மாற்றவும்:

யாராவது உங்கள் வைஃபையுடன் கனெக்ட் ஆக முடிந்தாலும் கூட, உங்கள் வைஃபை பாஸ்வேர்ட் போன்ற முக்கியமான தகவல்களில் மாற்றங்களை செய்யாமல் இருக்க, உங்கள் ரவுட்டரின் லாக்-இன் விவரங்களையும் நீங்கள் மாற்றலாம்.

04. வைஃபை நேம் / எஸ்எஸ்ஐடி-ஐ மறைக்கவும்:

வைஃபை நேம் / எஸ்எஸ்ஐடி-ஐ மறைப்பதன் வழியாக, உங்கள் நெட்வொர்க்குடன் ஒரு 'கெஸ்ட்' தனது டிவைஸை கனெக்ட் செய்ய விரும்பினால், உங்கள் வைஃபை நேம் மற்றும் பாஸ்வேர்ட்-ஐ கைமுறையாக உள்ளிட வேண்டும். இருப்பினும், 'க்யூஆர் கோட்'கள் வழியிலான கனெக்ஷனில் எந்த தடையும் இருக்காது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :