ஹோண்டா பிரியர்களுக்கு புதிய Honda CG125 பைக் அறிமுகம் செய்துள்ளது

HIGHLIGHTS

ஹோண்டா நிறுவனம் புதிய ஹோண்டா CG125 பைக்கை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

ந்த பைக் 90-களில் இந்தியாவில் விற்பனையான ஹோண்டா CT 100 டிசைனை கொண்டுள்ளது.

இந்த பைக் 125சிசி, ஏர் கூல்டு இன்ஜினை கொண்டுள்ளது.

ஹோண்டா நிறுவனம் புதிய ஹோண்டா CG125 பைக்கை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் 90-களில் இந்தியாவில் விற்பனையான ஹோண்டா CT 100 டிசைனை கொண்டுள்ளது. 

இந்த பைக் 125சிசி, ஏர் கூல்டு இன்ஜினை கொண்டுள்ளது. இது 9.9bhp அதிகபட்ச பவர் மற்றும் 9.5Nm பீக் டார்க்கை உருவாக்கக்கூடியது. இந்த இன்ஜின் லிட்டருக்கு 55.5 கிலோமீட்டர் ஃபூயல் எகானமியை கொண்டுள்ளது.

ரெட்ரோ டிசனையில் வெளியாகியுள்ள இந்த பைக்கில் ஸ்கொயர் ஹெட்லேம்ப், டெயில் லேம்ப், இண்டிகேட்டர்கள் ஆகியவை கிளாசிக் மாடலின் அடிப்படையில் தரப்பட்டுள்ளன. மேலும் இந்த பைக் 90-களில் இருப்பது போல டிஜிட்டல் இல்லாமல் முழுதும் அனலாக் இன்ஸ்ட்ருமெட் கிளஸ்டரையே கொண்டுள்ளது.

இந்த பைக்கின் விலை இந்திய மதிப்பில் ரூ.90,000-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது சீனாவில் மட்டும் வெளியாகியுள்ள இந்த பைக் விரைவில் உலகம் முழுவதும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :