28 ஆயிரம் போலி மொபைல் போன் நம்பரை சைபர் கிரைம் போலீஸ் அலேக்காக தட்டி தூக்கியது.

HIGHLIGHTS

சைபர் குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட 28,000 மொபைல் எண்களை ஹரியானா காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.

இவற்றில் 27,824 தொலைபேசி எண்கள் சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண் 1930, cybercrime.gov.in மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன.

28 ஆயிரம் போலி  மொபைல் போன் நம்பரை சைபர் கிரைம்  போலீஸ் அலேக்காக தட்டி தூக்கியது.

சைபர் குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட 28,000 மொபைல் எண்களை ஹரியானா காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. இந்த எண்கள் அனைத்தும் விரைவில் தடுக்கப்படும். இவற்றில் 27,824 தொலைபேசி எண்கள் சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண் 1930, cybercrime.gov.in மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

கண்டறியப்பட்டு இருக்கும் மொபைல் போன் நம்பர்களின் சேவைகள் விரைவில் துண்டிக்கப்பட்டு விடும் என காவல் துறை அதிகாரி தெரிவித்து இருக்கிறார். இந்த நம்பர்கள் சைபர்சேப் போர்டலில் பதிவேற்றம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய சைபர் கிரைம் மையம் சார்பில் இந்த பாதுகாப்பு தளம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 1930 உதவி எண், 29 சைபர் காவல் நிலையங்கள், 309 சைபர் உதவி மையங்களில் இருந்து 47 ஆயிரத்திற்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் பெறப்பட்டுள்ளன. இதுவரை ரூ. 15 கோடிக்கும் அதிகமான பணத்தை காவல் துறை மீட்டுள்ளது என ஒ பி சிங் மேலும் தெரிவித்தார். இந்தியாவில் அக்டோபர் மாதம் தேசிய சைபர் செக்யுரிட்டி மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

குருகிராமில் இருந்து 7 ஆயிரத்து 142, பரிதாபாத்தில் இருந்து 3 ஆயிரத்து 896 நம்பர்களும், பஞ்ச்குலாவில் இருந்து 1420. சோனிபட்டில் இருந்து 1408, ரோடக்கில் இருந்து 1045, ஹிசரில் இருந்து 1,228, அம்பாலாவில் இருந்து 1,101 மொபைல் போன் நம்பர்கள் கண்டறியப்பட்டன என்று ஒ பி சிங் தெரிவித்துள்ளார். மொபைல் போன் நம்பர்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக மாவட்ட சைபர்கிரைம் அலுவலகங்களுக்கு தகவல் கொடுக்குப்பட்டு வருகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile