கூகுள் பிளே ஸ்டோரை டார்கெட் செய்யும் சைபர் தாக்குதல்.பெரும் ஆபத்தில் ஆப்கள்.

HIGHLIGHTS

சில பயனர்களின் வங்கிச் சான்றுகளைத் திருடுவதற்காக உருவாக்கப்பட்டவை என பிளீப்பிங் கம்ப்யூட்டர் எனும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

கூகுள் பிளே ஸ்டோரில் டவுண்லோடு செய்யப்பட்ட 639 பினான்சியல் செயலிகளை டார்கெட் செய்வதாக கூறப்படுகிறது

இந்தியாவில் 100 மில்லியனுக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்ட போன்பே எனும் பேமண்ட் செயலியும் இத்தகைய ஆபத்தில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது

கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் கேமிங் செயலிகள் சில பயனர்களின் வங்கிச் சான்றுகளைத் திருடுவதற்காக உருவாக்கப்பட்டவை என பிளீப்பிங் கம்ப்யூட்டர் எனும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியில் மறைந்திருக்கும் மொபைல் பேங்கிங் ட்ரோஜான்கள், நீங்கள் முறையான வங்கி அல்லது நிதிப் பயன்பாட்டைத் தொடங்கும்போது செயல்பட தொடங்குமாம்.

உண்மையான லாகின் பக்கங்களுக்கு பதில் போலியான்வற்றை காண்பித்து பயனர்களின் அக்கவுண்ட் விவரங்களை திருடி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனவாம். இதில் மிகவும் அபாயகரமான டாப் 10 ட்ரோஜான்கள், 1 பில்லியன் முறைக்கு மேல் கூகுள் பிளே ஸ்டோரில் டவுண்லோடு செய்யப்பட்ட 639 பினான்சியல் செயலிகளை டார்கெட் செய்வதாக கூறப்படுகிறது.

அதேபோல் இந்தியாவில் 100 மில்லியனுக்கும் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்ட போன்பே எனும் பேமண்ட் செயலியும் இத்தகைய ஆபத்தில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. டீபாட் எனும் ட்ரோஜான் தான் இதில் 410 செயலிகளை பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அடுத்ததாக எக்ஸ்பாட் எனும் ட்ரோஜான் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் அமெரிக்காவை சேர்ந்த பயனர்களுக்கு தான் ஆபத்து அதிகமாம். நான்கில் மூன்று பயனர்கள் இதுபோன்ற செயலிகளை பயன்படுத்தி தினசரி தங்களது பண பரிவர்தனைகளை செய்துவருவதாக கூறப்படுகிறது. இந்த லிஸ்ட்டில் அதிகபட்சமாக அமெரிக்கர்கள் பயன்படுத்தும் 121 செயலிகளும், இங்கிலாந்தைச் சேர்ந்த 55 செயலிகளும், இத்தாலியின் 43 செயலிகளும், டர்க்கியின் 34 செயலிகளும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 33 செயலிகளும், பிரான்ஸை சேர்ந்த 31 செயலிகளும் உள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :