Mi Fan பெஸ்டிவல் 2 நாட்களுக்கு விசேஷமாக இருக்கும், Xiaomi சாதனங்களில் சிறப்பு சலுகைகளை Mi Fan விழா வழங்குகிறது

Mi Fan பெஸ்டிவல் 2 நாட்களுக்கு விசேஷமாக இருக்கும், Xiaomi சாதனங்களில் சிறப்பு சலுகைகளை Mi Fan விழா வழங்குகிறது
HIGHLIGHTS

சியோமி Mi ஃபேன் ஃபெஸ்டிவல் என்ற பெயரில் சியோமி சாதனங்களுக்கு அதிரடி தள்ளுபடி, சலுகைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

சியோமி நிறுவனம் இந்தியாவில் Mi ஃபேன் ஃபெஸ்டிவல் அறிவித்துள்ளது. நேற்று (ஏப்ரல்-2) துவங்கிய சிறப்பு விற்பனையில் சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு அதிகபட்சம் ரூ.3000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

இத்துடன் ஏப்ரல் 5 மற்றும் ஏப்ரல் 6-ம் தேதி விற்பனை நடைபெற இருக்கிறது. இந்த விற்பனையில் சியோமி நிறுவன உதிரி பாகங்கள், ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது. 

சியோமி சாதனங்களின் புதிய விலை

சியோமி Mi மிக்ஸ் 2 ரூ.29,999 (ரூ.3000 தள்ளுபடி)
சியோமி Mi மேக்ஸ் ரூ.12999 (ரூ.1000 தள்ளுபடி)
சியோமி ரெட்மி 4 (64 ஜிபி) ரூ.9999 (ரூ.500 தள்ளுபடி)
Mi பேன்ட் HRX எடிஷன் ரூ.999 (ரூ.300 தள்ளுபடி)
Mi இன்-இயர் ஹெட்போன் ப்ரோ HD ரூ.1,699 (ரூ.300 தள்ளுபடி)
Mi ஹெட்போன் கம்ஃபர்ட் ரூ.2,699 (ரூ.300 தள்ளுபடி)
Mi விஆர் பிளே 2 ரூ.999 (ரூ.300 தள்ளுபடி)
Mi பிஸ்னஸ் பேக்பேக் ரூ.999 (ரூ.300 தள்ளுபடி)
Mi  கார் சார்ஜர் ரூ.499 (ரூ.200 தள்ளுபடி)
Mi ஏர் பியூரிஃபையர் ஃபில்ட்டர் ரூ.1,999 (ரூ.500 தள்ளுபடி)

ஏப்ரல் 5-ம் தேதி ஃபிளாஷ் விற்பனை காம்போக்கள்

ரெட்மி 5A + Mi எல்இடி ஸ்மார்ட் டிவி 4A 32 இன்ச் ரூ.5999
Mi பேன்ட் HRX எடிஷன் + Mi பேன்ட் ஸ்டிராப் – HRX எடிஷன் ரூ.199
Mi ப்ளூடூத் ஸ்பீக்கர் 2 + Mi இயர்போன் பேசிக் ரூ.399
ரெட்மி Y1 லைட் + ரெட்மி Y1 லைட் சாஃப்ட் கேஸ் ரூ.249
Mi பேன்ட் 2 + Mi பாடி கம்போசிஷன் ஸ்கேல் ரூ.1,799
Mi ஏர் பியூரிஃபையர் 2 + Mi ஏர் பியூரிஃபையர் ஃபில்ட்டர் ரூ.2499

இத்துடன் மோர் லைக், மோர் டிஸ்கவுன்ட்ஸ் சலுகையில் குறிப்பிட்ட சாதனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட லைக் வழங்கப்படும் பட்சத்தில் அறிவிக்கப்பட்ட தொகை சாதனத்தின் விலையில் இருந்து குறைக்கப்படும். எனினும் இது குறைந்த எண்ணிக்கையிலான சாதனங்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. கலர் அவர் பிளானட்ஸ் விளையாட்டில் வாடிக்கைாயளர்கள் அதிக கூப்பன்களை வெல்ல முடியும்.

ஷேர் அன்ட் இயர்ன் சலுகையில் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட குழுவுடன் இணைந்து பகிர்ந்து கொள்ள முடியும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்களது நண்பர்களை வரவேற்று குழு ஒன்றை உருவாக்க முடியும். மூன்று பேர் இணைந்து ஒரு குழு உருவானால் போதுமானது. இவ்வாறு குழு உருவானதும் சியோமி வழங்கும் ரூ.300 மதிப்பிலான கூப்பன்களை பெற முடியும். குழுவினை உருவாக்கியவருக்கு ரூ.200 மதிப்பிலான கூப்பனும், மற்ற இருவருக்கும் ரூ.50 மதிப்புடைய கூப்பன்கள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒரு குழுவினை ஒருமுறை மட்டுமே உருவாக்க முடியும்.

ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான ஃபிளாஷ் விற்பனை ஏப்ரல் 6 அதிகாலை 00:00 (AM) துவங்குகிறது. இதில் வாடிக்கையாளர்கள் ரூ.699 மதிப்புடைய Mi இயர்போன்களை இலவசமாக வெல்ல முடியும். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. சியோமி அறிவித்து இருக்கும் அனைத்து சலுகைகளையும் சியோமி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அறிந்து கொள்ள முடியும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo