Whatsapp யில் உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பும் வசதி அறிமுகம்.

Whatsapp யில் உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பும் வசதி அறிமுகம்.
HIGHLIGHTS

Whatsapp ஆனது பயனர்களின் வசதி மற்றும் பயனர் இன்டெர்பெஸ் மேம்படுத்த புதிய அம்சங்களை Message Yourself வெளியிட்டுள்ளது

இப்போது நிறுவனம் உலகளவில் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

இது உங்கள் முக்கியமான குறிப்புகள், ஷெட்யூல் மற்றும் ஆவணங்களைச் சேமிக்கவும், மேலும் உங்களுக்குச் செய்திகளை அனுப்பவும் உதவுகிறது

இன்ஸ்டன்ட் மெசேஜ் செயலியான Whatsapp ஆனது பயனர்களின் வசதி மற்றும் பயனர் இன்டெர்பெஸ்  மேம்படுத்த புதிய அம்சங்களை Message Yourself வெளியிட்டுள்ளது. இந்த அம்சம் முதலில் சோதனைக்காக வெளியிடப்பட்டது. இப்போது நிறுவனம் உலகளவில் வெளியிடுவதாக அறிவித்துள்ளது. அடிப்படையில், இது 1:1 அரட்டையாகும், இது உங்கள் முக்கியமான குறிப்புகள், ஷெட்யூல் மற்றும் ஆவணங்களைச் சேமிக்கவும், மேலும் உங்களுக்குச் செய்திகளை அனுப்பவும் உதவுகிறது.

இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தாங்கள் செய்ய வேண்டிய பணி சார்ந்த விவரங்களை குறித்துக் கொள்ள உதவும். இந்த அம்சத்தில் ஷாப்பிங் செய்ய வேண்டிய பொருட்களின் பட்டியல், ரிமைண்டர் உள்ளிட்டவைகளை குறித்து வைத்துக் கொள்ளலாம். முதற்கட்டமாக இந்த அம்சம் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்ட போது, வாட்ஸ்அப் உங்களின் போன் நம்பருக்கு மெசேஜ் அனுப்பிக் கொள்வதை குறிக்கும் வகையில் தனி கேப்ஷனை வழங்கியது.

மேலும் சிலருக்கு தங்களின் சாட் பாக்ஸ்-இல் சொந்த மொபைல் நம்பர் சிறிது காலத்திற்கு தெரிந்தது. மல்டி டிவைஸ் வசதி இருப்பதால் உங்களது மொபைல் நம்பருக்கு மெசேஜ் அனுப்பிக் கொள்ளும் போது, அந்த மெசேஜ் நீங்கள் சின்க் செய்திருக்கும் மற்ற சாதனங்களிலும் காண்பிக்கப்படும்.

வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ் யுவர்செல்ஃப் அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் வழங்கப்பட்டு வருகிறது. வரும் வாரங்களில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு விடும். இதுதவிர மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி, வாய்ஸ் ஸ்டேட்டஸ் அப்டேட் என ஏராளமான புது அம்சங்கள் வாட்ஸ்அப்-இல் வழங்கப்பட இருக்கிறது.

Message Yourself  அம்சம் எப்படி வேலை செய்யும்?

  • மெசேஜ் யுவர்செல்ஃப் அம்சத்தைப் பயன்படுத்த, முதலில் உங்கள் மொபைலில் வாட்ஸ்அப்பைத் திறக்க வேண்டும்.
  • இப்போது பயன்பாட்டின் ஸ்க்ரீனில் கீழ் வலது மூலையில் உள்ள எக்சன் பட்டனை கிளிக் செய்யவும்.
  • இப்போது இங்கே நீங்கள் மேலே உள்ள கான்டெக்ட் லிஸ்டை காண்பீர்கள், புதிய அப்டேட்டிற்க்கு பிறகு உங்கள் கான்டெக்ட்டை இங்கே காண்பீர்கள்.
  • இந்த கான்டெக்ட்டில் தட்டவும், பின்னர் நீங்கள் சேட்டை தொடங்கலாம். அதாவது, உங்களுக்கே செய்திகளை அனுப்ப முடியும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo