DTH சேவைக்கு அதிரடி விதிமுறை, விதித்த TRAI..!

DTH  சேவைக்கு  அதிரடி விதிமுறை,  விதித்த  TRAI..!
HIGHLIGHTS

DTH சேவையினை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் இனி தாங்கள் பார்க்கும் சேனல்களுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும் என TRAI தெரிவித்துள்ளது!

DTH சேவையினை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் இனி தாங்கள் பார்க்கும் சேனல்களுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும் என TRAI தெரிவித்துள்ளது!

டிராய் அமைப்பு கொண்டுவந்துள்ள இந்த புதிய விதிமுறைகள் வரும் 29-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கேபிள் மற்றம் ஒளிபரப்பு சேவைகளுக்கான புதிய விதிமுறைகளையும் இந்திய  தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) ஆணையம்  வெளியிட்டுள்ளது 

இந்த புதிய விதிமுறைகளால் வாடிக்கையாளர்கள் தற்போது பார்த்து வரும் சேனல் சேவையில், எந்தவிதத்திலும்  பிரச்சனைகளும்  ஏற்படாது என்று டிராய் தெளிவாகத் குறிப்பிட்டுள்ளது.

மக்கள்  தேவையற்ற  சேனல்கள்  நிறைய வைத்திருந்தார்கள், மொழி புரியுதோ இல்லையோ எக்கச்சக்கமான சேனல்கள் அவைத்து இருந்தார்கள் அத்தகைய  சேனல்களுக்கு சேர்த்து தான்  மாதாந்திர  பணமும்  செலுத்தி வருகிறார்கள் 

இதனுடன் நீங்கள் பார்க்கும் எந்த சேனல்கள் என்ன என்ன விலையில் இருக்கிறது என்பதை பற்றிய விவரங்கள் உங்களுக்கு வழங்கப்படும் அதனை பொருட்டு  உங்களிடமிருந்து பணம்  வசூலிக்கப்படும் 

மேலும்  நீங்கள்  பார்க்கும் ஒவ்வொரு சேனலுக்கு  குறிப்பாக குறிப்பிடப்பட்டிருக்கும் பணத்தை கட்ட வேண்டும், அதாவது ஒவ்வொரு சேனலுக்கு குறிப்பிட்ட தொகை  விதிக்கப்பட்டிருக்கும், அதை தொடர்ந்து  உங்களுக்கு பிடித்த  சேனல்களை தேர்ந்தெடுத்து அதற்க்கான பணம் செலுத்த வேண்டி இருக்கும்.

இதுகுறித்து TRAI வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது…

டிசம்பர் 29-ஆம் தேதிக்குப் பின்னர் TRAI-ன் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தால், ஏற்கெனவே மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பல்வேறு சேனல்கள் சேவை நிறுத்தப்படும் என்ற செய்தி ஊடகங்களில் வெளிவருகிறது. TRAI-ன் புதிய விதிகளின் படி தற்போது வாடிக்கையாளர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் சேனல்களில் எதையுமே 29-ம் தேதிக்குப் பின்பு துண்டிக்கக் கூடாது.

புதிதாயக DTH சேவையினை பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, DTH உபகரணங்கள் சேவைதொடக்க கட்டணம் ரூ.500 மிகாமல் வசூளிக்க வேண்டும் எனவும் TRAI குறிப்பிட்டுள்ளது, அதாவது இன்ஸ்டாலேசன் சார்ஜ் 350-க்கு மிகாமலும், ஆக்டிவேசன் சார்ஜ் 150-க்கு மிகாமலும் வசூளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo