Realme யின் வயர்லெஸ் ஹெட்போன் மற்றும் 10,000Mah கொண்ட பவர் பேங்க் அறிமுகம்.

Realme யின் வயர்லெஸ் ஹெட்போன் மற்றும் 10,000Mah கொண்ட பவர் பேங்க் அறிமுகம்.

ரியல்மி பிராண்டு புதிய ரியல்மி XT ஸ்மார்ட்போனுடன் ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் ஹெட்போன் மற்றும் பவர் பேங்க் சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய வயர்லெஸ் ஹெட்போனில் ப்ளூடூத் 5.0 மற்றும் பெஸ்டெக்னிக் சிப் வழங்கப்பட்டுள்ளது. தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்க 11.2 எம்.எம். பாஸ் பூஸ்ட் டிரைவர் வழங்கப்பட்டுள்ளது.

30 கிராம் எடை கொண்டிருக்கும் புதிய வயர்லெஸ் ஹெட்போன் சவுகரிய மற்றும் பிரீமியம் அனுபவத்தை வழங்கும். காந்த வடிவமைப்பு கொண்டிருக்கும் வயர்லெஸ் பட்ஸ் ஒன்றாக இணைந்து கொள்ளும். இந்த ஹெட்செட் IPX4 சான்று பெற்ற ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் அம்சங்கள்:

– பெஸ்டெக்னிக் BES2300 ஆடியோ சிப்
– ப்ளூடூத் 5.0
– 11.2 எம்.எம். டிரைவர்கள்
– மெட்டல் / சிலிகான் ஜெல் நிக்கல் டைட்டானியம் மெமரி அலாய்
– பில்ட்-இன் மைக்ரோபோன்
– ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IPX4)
– 110 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங்

ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் பிளாக், கிரீன் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,799 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ரியல்மி இந்தியா வலைத்தளத்தில் நடைபெறுகிறது. விரைவில் இது ஆஃப்லைன் சந்தையிலும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி பவர் பேங்க் இருவழி 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள யு.எஸ்.பி. டைப்-சி மற்றும் டைப்-ஏ போர்ட்களை கொண்டு ஒரே சமயத்தில் இரண்டு சாதனங்களை சார்ஜ் செய்து கொள்ளலாம். 12.5 எம்.எம். தடிமனாக இருக்கிறது. 

ரியல்மி 10,000Mah . பவர் பேங்க் 

ரியல்மி 10,000 Mah . பவர் பேங்க் அம்சங்கள்:

– 10000 Mah  லித்தியம் பாலிமர் பேட்டரி
– யு.எஸ்.பி. டைப்-ஏ மற்றும் யு.எஸ்பி. டைப்-சி டூயல் அவுட்புட்
– 18 வாட் இருவழி ஃபாஸ்ட் சார்ஜிங்
– 12 அடுக்கு பாதுகாப்பு
– தடிமன்: 12.5 எம்.எம்.
– எடை: 230 கிராம்
– 18 வாட் சார்ஜரில் 3.28 மணி நேரத்திலும், 10 வாட் சார்ஜரில் 5.36 மணி நேரத்திலும் சார்ஜ் ஆகிடும்

விலை மற்றும் விற்பனை 
10,000 எம்.ஏ.ஹெச். பவர் பேங்க் எல்லோ, கிரே மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் ரியல்மி அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. விற்பனை செப்டம்பர் மாத இறுதியில் துவங்குகிறது.Realme-Buds-Wireless-realme-10000mAh-power-bank

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo