குவால்காம் ஸ்னாப்டிராகன் 8150 இன்று வெளியாகிறது
குவால்காம் தொழில்நுட்ப மாநாடு டிசம்பர் 4ம் தேதி துவங்கி 6ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
குவால்காம் நிறுவனத்தின் அதிநவீன ஃபிளாக்ஷிப் பிராசஸர் இந்த மாதம் நடைபெற இருக்கும் ஆண்டு தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குவால்காம் நிறுவனம் தனது ஆண்டு தொழில்நுட்ப மாநாட்டிற்கான அழைப்பிதழ்களை அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.
Surveyஇவ்விழா டிசம்பர் 4ம் தேதி ஹவாயில் நடைபெற இருக்கிறது. இதே விழாவில் குவால்காம் நிறுவனம் தனது ஸ்னாப்டிராகன் 8150 பிராசஸரை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பிராசஸர் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஸ்னாப்டிராகன் 845 பிராசஸரின் அப்டேட் செய்யப்பட வெர்ஷன் ஆகும்.
ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்னாப்டிராகன் 8150 சிப் உடன் அட்ரினோ 640 வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் புதிய பிராசஸர் 'ஸ்னாப்டிராகன் 8XX' என்ற வகையில் பெயரிடப்படும் என கூறப்பட்டது.
குவால்காம் உருவாக்கி இருக்கும் புதிய பிராசஸர் முந்தைய ஸ்னாப்டிராகன் 845 விட 30 சதவிகிதம் வேகமாக இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குவால்காம் மாநாட்டின் கரு முதல் 5ஜி அனுபவத்திற்கு தயாராகுகங்கள் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய பிராசஸரில் 5ஜி நெட்வொர்க் சப்போர்ட் இருக்கும் என்பது உறுதியாகி இருக்கிறது.
புதிய பிராசஸர் ஸ்னாப்டிராகன் 855 என்றும் அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய பிராசஸர் கொண்டு வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S 10 மாடல் இருக்கும் என்றும், இது சில காலத்திற்கு சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்க்படலாம் என்றும் கூறப்படுகிறது.
குவால்காம் தொழில்நுட்ப மாநாடு டிசம்பர் 4ம் தேதி துவங்கி 6ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile