இந்திய மொபைல் காங்கிரஸ் யில் ம் 4ஜி மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப் குவால்காம் அறிமுக செய்தது
மொபைல் போனின் சிப்செட் தயாரிக்கும் குவால்காம் நிறுவனம் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பங்களை சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப் மாடலை இந்தியா மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது.
மொபைல் போனின் சிப்செட் தயாரிக்கும் குவால்காம் நிறுவனம் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பங்களை சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப் மாடலை இந்தியா மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது.
Surveyஇதுபோன்ற வசதி கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்கள் 2019ம் ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகமாக இருக்கின்றன,” என குவால்காம் டெக்னாலஜிஸ் நிறுவன மூத்த துணை தலைவர் துர்கா மல்லாடி தெரிவித்தார்.
வட அமெரிக்கா மற்றும் கொரியாவில் 2019ம் ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் 5ஜி தொழில்நுட்பம் வணிக ரீதியில் வழங்கப்பட இருக்கிறது. 5ஜி தொழில்நுட்பம் அதிவேக இணைய வேகத்தை சீராக வழங்குகிறது. “4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தை இயக்கும் வசதி கொண்ட கான்செப்ட் ஸ்மார்ட்போன் வடிவம் இது. இந்த ஸ்மார்ட்போன் மில்லிமீட்டர் வேவ் பேன்ட்கள் மற்றும் சப் 6 ஜிகாஹெர்ட்ஸ் பேன்ட்களை சப்போர்ட் செய்யும்.
இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் அதிக பிரபலமானவையாக இருக்கின்றன. இங்கு சாதனம் மற்றும் உள்கட்டமைப்புகள் என இரண்டும் தயார் நிலையில் இருக்கும். அந்த வகையில் இந்திய நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் கிடைக்கும் போது இந்தியாவில் 5ஜி சேவை சீராக வெளியிடப்படும்,” என அவர் மேலும் தெரிவித்தார்.
பொதுவாக புதிய தொழில்நுட்பங்களை நிறுவனங்கள் முதலில் பிரீமியம் சாதனங்களில் வழங்கி, அதன்பின் விலை குறைந்த சாதனங்களுக்கு பயன்பாட்டிற்கு வழங்கப்படும். இதன் பின் புதிய தொழில்நுட்பம் வெகுஜன மக்களிடையே அதிக வரவேற்பை பெறும்.
“தற்சமயம் இந்த தொழில்நுட்பம் ஆரம்ப காலக்கட்டத்தில் தான் உள்ளது. இதற்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதும், நிறுவனங்கள் இதனை வெளியிட துவங்குவர், இதற்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளது,” என அவர் தெரிவித்தார்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile