Premalu OTT யில் இன்று வருகிறது குடும்பத்துடன் பார்த்து மகிழுங்க

Premalu OTT யில் இன்று வருகிறது குடும்பத்துடன் பார்த்து மகிழுங்க
HIGHLIGHTS

பிரேமலு தென்னிந்தியாவின் ப்லாக்பஸ்ட்டர் திரைப்படம் கிரிஷ் A D இயக்கத்தில் வெளியாகியது

இந்த திரைபடத்தில் நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார்

ஏப்ரல் 12 ஆன இன்று OTT யில் வெளியாகியது எந்த OTT பிளாட்பார்மில் வருகிறது

பிரேமலு தென்னிந்தியாவின் ப்லாக்பஸ்ட்டர் திரைப்படம் கிரிஷ் A D இயக்கத்தில் வெளியாகியது இந்த திரைபடத்தில் நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார் இப்படம் கடந்த மாதம் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது அதனை தொடர்ந்து ஏப்ரல் 12 ஆன இன்று OTT யில் வெளியாகியது எந்த OTT பிளாட்பார்மில் வருகிறது என்பதை முழுமையாக பார்க்கலாம் வாங்க.

பிரேமலு திரைப்படத்தை கிரீஷ் A D மற்றும் கிரண் ஜோசி இணைந்து இதை எழுதியுள்ளனர் கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு, ஷ்யாம் மோகன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளார்கள் இப்படத்தை ஃபஹத் ஃபாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் ஆகிய நான்கு நடிகர்கள் தயாரித்திருந்தனர். விஷ்ணு விஜய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் மொத்தம் ரூ.135 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

பிரேமலு OTT வெளியிட்டு தகவல்

அதிக வசூல் செய்த வரிசையில் மலையாளப் படங்களில் டாப் 5 இடங்களில் பிரேமலு இருக்கிறது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் காரணமாக தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு கடந்த மாதம் 8 ஆம் தேதி வெளியானது. அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாகத் தமிழ் மற்றும் தெலுங்கில் கடந்த மாதம் 15ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஏப்ரல் 12 ஆன இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தை தியேட்டரில் பார்த்தவர்கள் ஓடிடியில் பார்க்க ஆர்வம் காட்டி உள்ளன

பிரேமலு படத்தின் கதை

இப்படத்தின் கதை பற்றி பேசினால் GATE தேர்வுக்குத் தயாராவதற்காக ஹைதராபாத் நகருக்குச் செல்லும் பொறியியல் பட்டதாரி இளைஞனான சச்சினின் கதையை பிரேமலு எதுத்து கூறியுள்ளது ஹைதராபாத்தில் அவன், ஐடி துறையில் வேலை செய்யும் ரீனுவைச் சந்திக்கிறான், அவர்கள் நண்பர்களாகிறார்கள். சச்சின் ரீனுவை ஒருதலையாகக் காதலிக்க ஆரம்பிக்க, அடுத்தடுத்து நடக்கும் சுவாரஸ்யமான கதைக்கலாம் நகர்கிறது மேலும் இது நம்மை ஒரு அழகான பயணத்திற்குக் கூட்டிச் செல்கிறது.

இதையும் படிங்க: Siren OTT : ஜெயம் ரவி நடிக்கும் Siren OTT தேதி ஒத்திவைப்பு

நஸ்லென், மமிதா, சங்கீத் பிரதாப், மற்றும் அகிலா பார்கவன், முதன்மைப்பாத்திரங்களில் அசத்தியுள்ளனர். “ஜேகே”யாக ஷியாம் மோகன் அனைவரையும் கவரும் அட்டகாச நடிப்பை வழங்கியுள்ளார். மீனாட்சி ரவீந்திரன், அல்தாஃப் சலீம், ஷமீர் கான் மற்றும் K S பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் மேலும் ஏப்ரல் 12, 2024 ஆன இன்று முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும், கலக்கலான ரொமான்ஸ் காமெடி திரைப்படமான “பிரேமலு” படத்தைக் கண்டுகளியுங்கள்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

 
Digit.in
Logo
Digit.in
Logo