ஒன்ப்ளஸ் 5G ஸ்மார்ட்போனை 2019ம் ஆண்டு வெளியிடும்,

ஒன்ப்ளஸ் 5G ஸ்மார்ட்போனை  2019ம் ஆண்டு  வெளியிடும்,

குவால்காம் ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் ஒன்பிளஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தனது அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டிருக்கும் என அறிவித்தார். லண்டனில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனினை 2019ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

நெட்வொர்க் இஇ சேவையுடன் ஒன்பிளஸ் 5ஜி சேவையை வழங்க இருக்கிறது. ஸ்மார்ட்போன்களில் 5ஜி சேவையை வழங்குவதற்காக ஒன்பிளஸ் நிறுவனம் 2017ம் ஆண்டு முதல் குவால்காம் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் சேர்ந்து வேலை செய்து வந்ததாக தெரிவித்துள்ளது.

2019ம் ஆண்டில் 5ஜி சேவையை வணிக ரீதியாக வழங்குவதற்கான வடிவமைப்பு மற்றும் சாதனங்களை உருவாக்க ஒன்பிளஸ் மற்றும் குவால்காம் வேலை செய்து வருகின்றன.

அக்டோபர் 2018ல் ஒன்பிளஸ் 5ஜி ஆராய்ச்சியில் புது சாதனையை படைக்கும் விதமாக முதல் 5ஜி ட்விட் பதிவிட்டது. இரண்டு நிறுவனங்களும் இணைந்து 5ஜி சேவையை வழங்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது. 

இதுகுறித்து குவால்காம் தொழில்நுட்ப மாநாட்டில் ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ கூறும் போது, 

ஒன்பிளஸ் வெறும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை மட்டுமே உருவாக்கி வருகிறது. அந்த வகையில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் மட்டுமே எங்களது தேர்வாக இருக்கிறது. இந்த பிராசஸரின் சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் 5ஜி வசதிகளை அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறோம். வாடிக்கையாளர்களுக்கு முடிந்தவரை சிறப்பான தொழில்நுட்பத்தை ஒன்பிளஸ் தொடர்ந்து வழங்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo