Lenovo ஸ்மார்ட் பல்ப் மற்றும் ஸ்மார்ட்டிஸ்பிளே வொய்ஸ் கண்ட்ரோல் வசதியுடன் அறிமுகம்.

Lenovo  ஸ்மார்ட் பல்ப் மற்றும் ஸ்மார்ட்டிஸ்பிளே வொய்ஸ் கண்ட்ரோல் வசதியுடன் அறிமுகம்.
HIGHLIGHTS

லெனோவோ ஸ்மார்ட் டிஸ்ப்ளே 7 இன்ச் விலை இந்தியாவில் ரூ. 8,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

லெனோவோ ஸ்மார்ட் பல்பு மற்றும் ஸ்மார்ட் கேமரா விலை விரைவில் அறிவிக்கப்படுகிறது.

Lenovo.com ஆன ஆன்லைன் ஷாப்பிங் சைட் பிளிப்கார்ட் மற்றும் லெனோவா ஸ்டார்களிலிருந்து வாங்கலாம்.

லெனோவோ நிறுவனம் இந்தியாவில் மூன்று புதிய ஸ்மார்ட் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட் டிஸ்ப்ளே, ஸ்மார்ட் பல்பு மற்றும் ஸ்மார்ட் கேமரா உள்ளிட்டவை ஸ்மார்ட் ஹோம் அக்சரீக்கள் பிரிவில் வெளியாகியுள்ளன.  மேலும் இந்த மூன்று சாதனங்களும் கூகுள் அசிஸ்டன்ட் வசதியுடன் வருகிறது.இதனுடன் இது 7-இன்ச்  ஸ்மார்ட் டிஸ்பிளே உடன் இதன் விலை 8,999ரூபாயில் இருக்கிறது.நீங்கள் இதை நிறுவனத்தின் அதிகாரபூர்வ வெப்சைட்  Lenovo.com ஆன ஆன்லைன்  ஷாப்பிங் சைட் பிளிப்கார்ட் மற்றும் லெனோவா ஸ்டார்களிலிருந்து வாங்கலாம்.

லெனோவோ ஸ்மார்ட் டிஸ்ப்ளே 7 இன்ச் விலை இந்தியாவில் ரூ. 8,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை லெனோவோ அதிகாரப்பூர்வ வலைத்தளம், ப்ளிப்கார்ட், லெனோவோ பிரத்யேக விற்பனை மையம் மற்றும் க்ரோமா விற்பனையகங்களில் நடைபெறுகிறது. லெனோவோ ஸ்மார்ட் பல்பு மற்றும் ஸ்மார்ட் கேமரா விலை விரைவில் அறிவிக்கப்படுகிறது.

லெனோவோவின் ஸ்மார்ட் டிஸ்ப்ளேவில் 7 இன்ச் டிஸ்ப்ளே ஆல்வேஸ் ஆன் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் முன்னணி பிராண்டுகளின் 5000-க்கும் அதிகமான ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை குரல்வழியே இயக்க முடியும். மேலும் டிஸ்ப்ளேவுடன் இணைக்கப்பட்ட கேமரா கொண்டு வீடியோ அழைப்புகளை ஏற்பது, வீட்டு வெளியே யார் இருப்பது என பார்க்க முடியும்.

இத்துடன் டூயல் அரே மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளதால், ஸ்மார்ட் டிஸ்ப்ளே கொண்டு உரையாடல்களை சவுகரியமாக மேற்கொள்ளலாம்.

பிளக் மற்றும் பிளே சாதனமான லெனோவோ ஸ்மார்ட் பல்பினை லெனோவோ லின்க் செயலி அல்லது குரல் மூலம் இயக்க முடியும். லெனோவோ ஸ்மார்ட் பல்பு கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் அமேசான் அலெக்சா தளங்களில் இயங்குகிறது. 

லெனோவோ ஸ்மார்ட் பல்பு 9 வாட் திறன் கொண்டிருக்கிறது. இதில் 800 லூமென்கள் இருப்பதால் வாழ்நாள் முழுக்க 15,000 மணி நேரத்திற்கு இதனை பயன்படுத்த முடியும். 19 கிராம் எடை கொண்டிருக்கும் லெனோவோ ஸ்மார்ட் பல்பு 2.4 ஜிகாஹெர்ட்ஸ் வைபை மூலம் இணைந்து கொள்கிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo