Hydrogem train Tamil
ஹரியானாவின் ஜிந்த் ரயில் நிலையத்தில், வெள்ளிக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடியால் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் (Hydrogen) ரயில் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் தொடக்கத்தின் மூலம், ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் ரயில்களைக் கொண்ட உலகின் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் லிஸ்ட்டில் இந்தியாவும் இணைந்துள்ளது. ஹைட்ரஜன் மிகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருளாகக் கருதப்படுவதால், பசுமைசார் போக்குவரத்து முறைகளை நோக்கி மாறுவதற்கான ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு டெவலப்மென்ட் திட்டமாக உருவாக்கப்பட்டுள்ள, ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தைச் சோதிக்கவும், இந்தியாவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த ரயில் பயணத்திற்கான எதிர்காலத் திட்டங்களுக்கு ஆதரவளிக்கவும் உதவும்.
ரிஸர்ச், டிசைன் மற்றும் ஸ்டேண்டர்ட் அமைப்பின் கீழ் (RDSO) அங்கிகரிக்கப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களின் படி முழுமையாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த முன்னோடித் திட்டம், வடக்கு ரயில்வேயின் ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் மற்றும் இந்தியாவின் நெட்-ஜீரோ உமிழ்வு(emission) இலக்குகளுக்கு ஆதரவளிக்கும் அதே வேளையில், ஹைட்ரஜன் மூலம் இயங்கும் போக்குவரத்து முறையின் சாத்தியக்கூறுகளை நிரூபிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்
ஜிண்ட் சிட்டி, பாண்டு பிண்டாரா சந்திப்பு, லலித் கேரா ஹால்ட், பாம்பேவா, இசாபூர் கெரி ஹால்ட், பியூட்டேன் ஹால்ட், கந்த்ராய் ஹால்ட், ரப்ரா ஹால்ட், லாத் ஹால்ட், மோகனா, பர்வாஸ்னி ஹால்ட் மற்றும் சோனிபட் நியூ ஆகியவை அடங்கும்.
Prime Minister @narendramodi flags off India's first Hydrogen train between Jind and Sonipat at Jind railway station#HydrogenTrain #भारत_की_पहली_हाइड्रोजन_ट्रेन @RailMinIndia
— PIB India (@PIB_India) July 17, 2026
Watch: ⬇️ pic.twitter.com/j1lJCliqRs
உலகின் ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் தொடங்கப்பட்டது , அதன் பிறகு ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்காவில் வந்தது.
இதையும் படிங்க சைலன்ட்டாக கஸ்டமருக்கு ஷாக் கொடுத்த Airtel யின் ரூ,549 திட்டம் நீக்கம்
பாதுகாப்பைப் பொறுத்தவரை, ரயில்வே எந்த முயற்சியையும் விட்டுவைக்கவில்லை; முழு அமைப்பும் சர்வதேசத் தரங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு, புகழ்பெற்ற ஜெர்மானியப் பாதுகாப்பு நிறுவனமான TÜV SÜD-ஆல் கடுமையாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியான காற்றோட்டத்தை உறுதி செய்வதற்கும், ரயிலுக்குள் ஏற்படும் கசிவுகளைக் கண்டறிவதற்கும் மேம்பட்ட ஹைட்ரஜன் மற்றும் தீப்பிழம்பு கண்டறியும் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. புகை அல்லது தீப்பிழம்பு போன்ற ஏதேனும் விரும்பத்தகாத சம்பவம் கண்டறியப்பட்டவுடன், அவை உடனடியாக முழு ஹைட்ரஜன் டெலிவரி தானாகவே நிறுத்திவிடும். லோகோ பைலட்டின் ரூமில் ஒரு பிரத்யேக எமர்ஜன்சி மோட் வழங்கப்பட்டுள்ளது, இது தேவைப்பட்டால் ரயிலைப் பாதுகாப்பாக இயக்க அனுமதிக்கிறது