போஸ்ட் ஆபிஸ் பேமண்ட் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 10 தகவல்கள்

போஸ்ட்  ஆபிஸ்  பேமண்ட்  பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 10 தகவல்கள்
HIGHLIGHTS

பேங்க் சேவையை கிராம மக்களிடமும் அதிகப்படுத்தும் நோக்கில் அஞ்சலக வங்கி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

மாவட்டத்திலும் சுமார் 648 கிளைகள் திறக்கப்பட்டுள்ளது

நீண்ட நாட்கள் ஆலசோனைக்கு பிறகு India Post Payments Bank (IPPB) இப்பொழுது இறுதியாக ஆகஸ்ட் 21  அறிமுகம், செய்ய இருக்கிறது இந்த சேவை அனைத்து இடங்களிலும் எளிதாக கிடைக்கும் வகையில் ஒவ்வொரு நகரங்களிலும் இதன் கிளைகள்  திறக்க உள்ளார்கள், இதற்க்கு  முன்பே ஏர்டெல்  மற்றும் paytm யில் இது போன்ற சேவையை ஆரம்பித்து உள்ளார்கள்.

பிரதம மந்திரி நரேந்திர மோடி.  இந்த பேங்க் சேவையை திறந்து வைத்தார் இது தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 648 கிளைகள் திறக்கப்பட்டுள்ளது 

இது தவிர, இந்த ஆண்டின் இறுதியில், அவர்கள் நாடு முழுவதும் சுமார் 1.55 லட்சம் தபால் நிலையங்களை அடைவார்கள் என்று நம்பப்படுகிறது. இந்த சேவை மூலம் கிராமப்புறங்களில் பேங்க் வசதிகளை வழங்க வேண்டும். இது நாட்டின் முக்கிய பேங்க் வலையமைப்பாகும், இது கிராமப்புற மட்டத்திலிருந்து இயங்கும்.

1. பேமண்ட்ஸ் பேங்க் என்பது ரிசர்வ் பேங்க் அனுமதியுடன் பேங்க் சேவையாற்றும் நிதி நிறுவனம்.

2. பேமண்ட் பேங்கில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள், ₹1 லட்சம் வரையிலான பணம் டெபாசிட் செய்யலாம்.

3. மற்ற பேங்க் சேவை போன்றே பேமண்ட் பேங்கில் பண பரிவர்த்தனை செய்ய முடியும். கட்டணம் செலுத்த முடியும்.

4. பேமண்ட் வங்கியில் கடனோ, கிரெடிட் கார்டோ பெற முடியாது.

5. பேடிஎம், ஏர்டெல் பேமண்ட் வங்கிக்கு போட்டியாக அஞ்சலகத்தின் பேமண்ட் வங்கி நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் இறங்கி உள்ளது

6. போஸ்ட் பேமண்ட் வங்கியானது முழுக்க முழுக்க மத்திய அரசால் நடத்தப்படும் பேங்க் சேவை ஆகும் 

7. போஸ்ட் பேமண்ட் பேங்கில்  சேமிப்பு அக்கவுண்ட் தொடங்கினால், 4% வட்டி வழங்கப்படுகிறது

8. பேமண்ட் வங்கியில் மொபைல் ஆப் மூலம் ஆதார் எண்ணை பயன்படுத்தி அக்கவுண்ட் தொடங்கலாம்

9. அஞ்சலக பேமண்ட் வங்கி சேவை கிராமம் தோறும் கொண்டு சேர்க்கும் விதமாக போஸ்ட்மேன் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது

10. அக்கவுண்டில் உள்ள பணத்தை அஞ்சலக கவுண்டரிலோ, ஏடிஎம் மூலமோ பெற முடியும். எஸ்.எம்.எஸ்., ஐ.வி.ஆர். மூலமும் பண வர்த்தனை செய்யலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo