நீங்கள் எந்த பேங்கில் அக்கவுண்ட் வைத்து இருந்தாலும் போஸ்ட்ஆபிசில் பணம் எடுக்கலாம், புதிய வசதி அறிமுகம்.

நீங்கள்  எந்த  பேங்கில்  அக்கவுண்ட்  வைத்து இருந்தாலும் போஸ்ட்ஆபிசில்  பணம்  எடுக்கலாம், புதிய வசதி  அறிமுகம்.

தபால் நிலையங்களில் வங்கி சேவை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 1 கோடி தபால் பேங்க் அக்கவுண்ட்கள் தொடங்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் மட்டும் 3 லட்சத்து 98 ஆயிரம் அக்கவுண்டகள் தொடங்கப்பட்டு இருக்கிறது.
 
கடந்த மாதம் வரை தபால் பேங்க்அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே தபால் பேங்க் சேவையை பெறும் நிலை இருந்தது. ஆனால் தற்போது இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதாவது எந்த வங்கியின் வாடிக்கையாளராக இருந்தாலும் அவரது வங்கிக்கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருந்தால் அவர் இனிமேல் தபால் வங்கிகளில் அதாவது தபால் நிலையங்களில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். அங்கு பணம் எடுக்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த புதிய வசதி கடந்த 1-ந்தேதி அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை டெல்லியில் நேற்று நடைபெற்ற தபால் வங்கியின் ஓராண்டு நிறைவு விழாவில் மத்திய சட்டம் மற்றும் தகவல் தொடர்புத்துறை மந்திரி ரவிசங்கர்பிரசாத் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அப்போது பேசிய அவர், ‘தபால் வங்கி சேவையில் இந்த ஓராண்டில் நாடு முழுவதும் 1 கோடி அக்கவுண்டர்கள் தொடங்கப்பட்டு உள்ளன. ‘ஜன்தன் யோஜனா’ திட்டத்துடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. எனவே அடுத்த ஓராண்டில் தபால் வங்கிக்கணக்குகளின் எண்ணிக்கை 5 கோடியாக உயர்த்த வேண்டும்’ என்றார்.

ஓராண்டு நிறைவையொட்டி, தபால் வங்கி சேவையை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கு மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் விருதுகளை வழங்கினார். இதில் ஊழியர்களின் சிறந்த செயல்பாட்டுக்காக (கோன் பனேகா பாகுபலி) இந்திய அளவில் முதல் இடத்துக்கான விருதை தமிழகம் பெற்றது. அதைப்போல ‘டிஜிட்டல் கிராமம்’ திட்டத்தில் 3-வது இடத்துக்கான விருதையும் தமிழகம் பெற்றது.

இந்த விருதுகளை தமிழக தலைமை தபால்துறை தலைவர் சம்பத் தலைமையிலான குழுவினர் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் தபால்துறை செயலாளர் அனந்த் நாராயண்நந்தா, தபால் வங்கி நிர்வாக இயக்குனர் சுரேஷ் சேத்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo