தமிழில் இமெயில் வசதி பெறுவது எப்படி ?

தமிழில்  இமெயில்  வசதி  பெறுவது எப்படி ?
HIGHLIGHTS

ஆண்டராய்டு ஐபோன்களில் பயன்படுத்தும் வகையிலும், ‘டேட்டா மெயில்‘ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ் உட்பட ஒன்பது மொழிகளில் இ-மெயில் மெயில் உருவாக்கும் செயலியை பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்தியுள்ளது.மத்திய அரசின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்துக்கு வலுசேர்க்க, இணையதளம் மூலம் கணிப்பொறியிலும், ஆண்டராய்டு ஐபோன்களில் பயன்படுத்தும் வகையிலும், ‘டேட்டா மெயில்‘ என்ற செயலியை  அறிமுகப்படுத்தியுள்ளது.

எப்படி வேலை செய்யும் எத்தனை மொழிகள் உண்டு?

  1. இதில், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி, தெலுங்கு, பெங்காலி, உருது, சீனம் மற்றும் அரபி என ஒன்பது மொழிகளில் ‘இ-மெயில்’ முகவரியை உருவாக்கலாம்.
  2. மொபைல் எண்ணை மட்டுமே உள்ளீடு செய்து விரும்பிய மொழிகளில், விரும்பிய பெயருடன் – இ-மெயில் முகவரியை உருவாக்கலாம்.
  3. கூடுதல் சிறப்பு அம்சமாக ரேடியோ என்ற தனிப்பிரிவு உள்ளது. கணக்கு துவங்குவோர், இப்பிரிவுக்குள் சென்று விருப்பமான பெயரில் ‘ரேடியோ சேனல்’ துவக்கலாம். இதன் மூலம், தங்களது குரலில் செய்தி உட்பட எத்தகையை கருத்துகளையும் பேசி ஒலிப்பரலாம்.
  4. சமூக வலைதளங்களில், இந்த ரேடியோவை இணைத்து, ஒலி வடிவிலும் பகிரலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo