இனி கட்டாயம் எல்லா போனிலும் Sanchar Saathi ஆப் இருக்க வேண்டும் அரசின் அதிரடி உத்தரவு
இந்திய அரசு அதாவது தொலைதொடர்பு துறை (DoT) இனி வரும் புதிய போனில் கட்டாயமாக Sanchar Saathi app இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என உத்தரவு கொடுத்துள்ளது அதாவது எந்த புதிய மொபைல் போனையும் இந்தியாவுக்கு மேனுபெகஜர் கொண்டு வரும்முன் அல்லது இந்தியாவில் விற்பனை செய்யும் முன் இதை செய்து இருக்க வேண்டும் என என திகட் கிழமை அன்று புதிய விதியை விதித்துள்ளது.
Surveyஅரசாங்கத்தின் சைபர் பாதுகாப்பு ஆப்பான சஞ்சார் சத்தி முன்பே ஏற்றப்பட்ட புதிய போன்களை விற்க அனைத்து மொபைல் போன் நிறுவனங்களுக்கும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆப் திருடப்பட்ட மொபைல் போன்களைக் கண்டறியவும், போலி IMEI எண்களை அடையாளம் காணவும், மோசடி கால்களை தடுக்கவும் உதவுகிறது. மேலும் உங்களுக்கு வரும் கால் யாருடையது என்பதை அறிய முடியும்.
Your new phone will come with a safety upgrade- #SancharSaathi, pre-installed by default.#DoT #Telecom @JM_Scindia @PemmasaniOnX @neerajmittalias @CNBCTV18Live @USOF_India @pib_comm @PIB_India pic.twitter.com/ZN5gmp1ivC
— DoT India (@DoT_India) December 1, 2025
அரசின் படி இந்த ஆப்யின் உதவியால் உங்களின் தொலைந்த போனையும் தேட முடியும், மேலும் இந்த ஒரு புதிய விதி ஆப்பிள் போன்ற நிறுவனத்திற்க்கு பிடிக்கவில்லை, ஏன் என்றால் ஆப்பிளின் பாலிசி படி போனில் எந்த ஒரு ஆப்பையும் ப்ரீ லோடட் ஆப் இன்ஸ்டால் செய்யப்பட்டு அனுப்புவதில்லை
இந்த புதிய விதியானது நவம்பர் 28 அரசு இந்தியாவில் விற்கப்படும் மற்றும் உருவாக்கப்படும் மொபைல் போனில் Sanchar Saathi ஆப் ஏற்கனவே போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும் என கட்டாயம் செய்யப்பட்டுள்ளது இந்த புதிய விதியின் காரணம் தொடர்ந்து வரும் புகார்கள் குறைக்க என்பதாகும்.
இதையும் படிங்க:டிசம்பர் வந்தாச்சு இன்னும் Aadhaar உடன் PAN லிங்க் செய்யாமல் இருந்தால் இந்த தேதிக்குள் உடனே லிங்க் செய்து கொள்ளுங்கள்
Sanchar Saathi நன்மைகள் என்ன?
- Sanchar Saathi வேப்சைட்டனது தொடர்ந்து வரும் புகார் மற்றும் மோசடியை கட்டுப்படுத்தும் வகையில் இதை உருவாக்கப்பட்டது .
- மே 2023 இல் அமைக்கப்பட்ட இந்த போர்டல், தொலைந்து போன மொபைல் போன்கள் மற்றும் தீங்கிழைக்கும் வலை இணைப்புகளைப் புகாரளிக்கவும் தடுக்கவும் அனுமதிக்கிறது.
- இது ஒரு பயனரின் பெயரில் உள்ள மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளவும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நம்பகமான தொடர்பு விவரங்களைச் சரிபார்க்கவும் உதவுகிறது.
- •முந்தைய HT அறிக்கையின்படி, இந்த ஆப்யில் மோசடி புகாரளிப்பதை எளிதாக்கும் என்று DoT அதிகாரி ஒருவர் கூறினார். “தற்போது, மோசடி அல்லது திருடப்பட்ட மொபைல் போன்களைப் புகாரளிக்க பயனர்கள் வெப்சைட்டில் செல்ல வேண்டியிருப்பதால், புகாரளிக்கும் நேரம் மாறுபடுகிறது,” என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
- • செயலி மூலம் மோசடியைப் புகாரளிப்பது குறித்து அதிகாரி கூறுகையில், போர்டல் “போதுமான அளவு மேம்பட்டது” என்றும் பயனர்கள் தங்கள் IMEI நம்பரை நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.
- மேலும் இந்த ஆப் மொபைல் கனெக்ஷன், இந்த போன் சரியானதா பயனரின் தகவல், பெயர் போன்றவட்ட்ரை இது சரி பார்க்கும்
Sanchar Saathi ஆப்பை தேர்டுக்க காரணம் என்ன ?
அரசாங்கத்தின் கூற்றுப்படி, மொபைல் திருட்டு, போலி IMEI நம்பர்கள், மோசடி அழைப்புகள் மற்றும் சைபர் மோசடி போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த அரசாங்க ஆப் பயனர்கள் திருடப்பட்ட போனை தடுக்கவும், சந்தேகத்திற்கிடமான கால்களை புகாரளிக்கவும், IMEI செல்லுபடியாகுமா என்பதைச் சரிபார்க்கவும் அனுமதிக்கிறது.
மேலும் இந்த ஆண்டு ஜனவரி அறிமுகமாகிய போனிலிருந்து இதுவரை 50 லட்சத்திற்கும் அதிகமான போனில் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது, அரசின் கூற்றுப்படி இது வரை 3.7 மில்லியனுக்கு அதிகமான திருடப்பட்ட அல்லது தொலைந்து போன போனை ப்ளாக் செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile