தவறான கொரோனா வைரஸ் வீடியோவை பரவுவதை தடுக்க கூகுள் அதிரடி.

தவறான கொரோனா வைரஸ் வீடியோவை  பரவுவதை தடுக்க கூகுள் அதிரடி.

கூகுள் மற்றும் ஆல்ஃபாபெட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல்கள் அடங்கிய வீடியோக்களை யூடியூப் தளத்தில் இருந்து நீக்கி வருவதாக தெரிவித்தார். இதற்கென செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்திருக்கிறார். 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

தற்சமயம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கக் கோரும் ஐந்து வழிமுறைகளை கூகுள் வலைதளத்தின் முகப்பு பக்கத்தில் அந்நிறுவனம் விளம்பரப்படுத்தி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதாக கூறும் நிரூபிக்கப்படாத வழிமுறைகள் அடங்கிய வீடியோக்களை தொடந்து நீக்கி வருகிறோம். கூகுள் மேப்ஸ் சேவையில் போலி விமர்சனங்கள் உடல்நல மையங்கள் சார்ந்த போலி விவரங்களை நீக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

அறிவியல், மருத்துவம், கல்வி மற்றும் சிறு வியாபாரங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சுந்தர் பிச்சை தெரிவித்திருக்கிறார்.இத்துடன் சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள கூகுள் (Google.org) சார்பில் ஐந்து கோடி டாலர்கள் வழங்கப்படுவதாகவும்,

இதுவரை கொரோனா வைரஸ் பற்றி யூடியூபில் இருந்து ஆயிரக்கணக்கான போலி வீடியோக்களை நீக்கி இருப்பதாக சுந்தர் பிச்சை தனது வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். இத்துடன் மருத்துவ முகக்கவசங்கள் மற்றும் சுவாசக் கருவிகளுக்கான விளம்பரங்களுக்கு கடந்த வாரம் முதல் தற்காலிக தடை விதித்து இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo