Iphone 11 சீரிஸ் முன் பதிவு ஆரம்பம் சுமார் ரூ. 7,000 வரை தள்ளுபடி.

Iphone 11 சீரிஸ்   முன் பதிவு ஆரம்பம் சுமார்  ரூ. 7,000 வரை  தள்ளுபடி.
HIGHLIGHTS

ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு ரூ. 7,000 வரை உடனடி தள்ளுபடியும், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 வாங்குவோர் செலக்ட் செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 4,000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மாடல்களுக்கான முன்பதிவுகளை அரம்பமாகியுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் முன்பதிவினை ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் பேடிஎம் மால் தளங்களில் செல்லலாம் .

ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு ரூ. 7,000 வரை உடனடி தள்ளுபடியும், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 வாங்குவோர் செலக்ட் செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 4,000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.இதனுடன் புதிய ஆப்பிள் சாதனங்களை முன்பதிவு செய்வோர் செலக்ட் செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு மாத தவணை முறை சேவையை பயன்படுத்தும் போது ரூ. 6,000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஐபோன் 11 ஸ்மார்ட்போனினை ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் பேடிஎம் மால் தளங்களில் முன்பதிவு செய்யலாம். இதன் துவக்க விலை 64 ஜி.பி. மாடலுக்கு ரூ. 64,900 என்றும் 128 மற்றும் 256 ஜி.பி. மாடல்கள் முறையே ரூ. 69,900 மற்றும் ரூ. 79,900 விலையில் துவங்குகிறது.

ஐபோன் 11 மற்றும் ஐபோன் 11 ப்ரோ

ஐபோன் 11 ப்ரோ மாடலையும் ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் பேடிஎம் மால் தளங்களில் முன்பதிவு செய்யலாம். இதன் துவக்க விலை ரூ. 99,900 என துவங்குகிறது. இதன் 256 மற்றும் 512 ஜி.பி. மாடல்கள் முறையே ரூ. 1,13,900 மற்றும் ரூ. 1,31,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனினை ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் பேடிஎம் மால் தளங்களில் முன்பதிவு செய்யலாம். இதன் துவக்க விலை ரூ. 1,09,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 256 மற்றும் 512 ஜி.பி. மாடல்கள் முறையே ரூ. 1,23,900 மற்றும் ரூ. 1,41,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மாடலை ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் பேடிஎம் மால் தளங்களில் முன்பதிவு செய்யலாம். இதன் துவக்க மாடலான 40எம்.எம். ஜி.பி.எஸ். விலை ரூ. 40,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 44எம்.எம். ஜி.பி.எஸ். விலை ரூ. 43,900, 40எம்.எம். ஜி.பி.எஸ். + செல்லுலார் ரூ. 49,900, 44எம்.எம். ஜி.பி.எஸ்.+ செல்லுலார் ரூ. 52,990, 40எம்.எம். ஜி.பி.எஸ்.+ செல்லுலார் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ரூ. 65,900, 40எம்.எம். ஜி.பி.எஸ்.+ செல்லுலார் மிலானிஸ் லூப் ரூ. 69,900, 44எம்.எம். ஜி.பி.எஸ்.+ செல்லுலார் மிலானிஸ் லூப் விலை ரூ. 73,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் இவற்றின் விற்பனை செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo