ஐபோன்களில் டிராய் ஆப்க்கு அனுமதியளித்த ஆப்பிள்

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 03 Dec 2018
HIGHLIGHTS
  • டிராய் எச்சரிக்கைக்கு ஒருவழியாக ஒப்புக் கொள்ளும் வகையில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் தனது ஐபோன் மாடல்களில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை குறைக்கும் வழிமுறைகளை அனுமதிக்கிறது.

ஐபோன்களில் டிராய் ஆப்க்கு அனுமதியளித்த ஆப்பிள்

டிராய் எச்சரிக்கைக்கு ஒருவழியாக ஒப்புக் கொள்ளும் வகையில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் தனது ஐபோன் மாடல்களில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை குறைக்கும் வழிமுறைகளை அனுமதிக்கிறது.

ஜனவரி 2019க்குள் ஐபோன்களில் டிராய் உருவாக்கிய டு நாட் டிஸ்டர்ப் (Do Not Disturb) செயலியை அனுமதிக்கவில்லை எனில், ஐபோன்களில் இந்திய செல்லுலார் நெட்வொர்க் சேவை நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்த நிலையில் வேறு வழியின்றி ஆப்பிள் செயலியை அனுமதிக்கிறது.

அந்த வகையில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டிராயின் செயலி கிடைக்கிறது. ‘TRAI DND – Do Not Disturb’ என பெயரிடப்பட்டு இருக்கும் செயலி பயனர்களுக்கு தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் உள்ளிட்டவற்றை முடக்குவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் செயலியில் டு நாட் டிஸ்டர்ப் ரெஜிஸ்ட்ரியில் பதிவு செய்து தேவையற்ற கான்டாக்ட்களிடம் இருந்து விலகியிருக்கச் செய்கிறது.

கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலி 2016ம் ஆண்டு அனுமதிக்கப்பட்டது. பின் இந்த செயலியின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் இந்த ஆண்டு வெளியிடப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஆப்பிள் நிறுவனம் இந்த செயலியை தனது ஆப் ஸ்டோரில் அனுமதிக்காமல் இருந்தது. 

எனினும், பயனரின் அழைப்பு மற்றும் குறுந்தகவல் விவரங்களை இந்திய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளாத செயலியை அனுமதி்ப்பதாக ஆப்பிள் தெரிவித்திருந்தது. தற்சமயம் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வெளியாகி இருக்கும் டி.என்.டி. செயலி எதுபோன்ற பாதுகாப்பு விதிகளை பின்பற்றுகிறது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

ஆப்பிள் சமீபத்தில் தனது ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் எஸ்.எம்.எஸ். மற்றும் கால் ரிப்போர்டிங் ஃபிரேம்வொர்க் வசதியை அறிமுகம் செய்தது. இது மொபைல் போன் மற்றும் மெசேஜ் செயலிகளுடன் நேரடியாக இணைந்திருக்கிறது. இது குறிப்பிட்ட போலி தகவல்களை மட்டுமே அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளும். 

ஐ.ஓ.எஸ். 12.1 மற்றும் அதற்கும் அதிக வெர்ஷன்களின் ஆப் ஸ்டோரில் டிராயின் டு நாட் டிஸ்டர்ப் செயலி ஏற்கனவே கிடைக்கிறது

logo
Sakunthala

coooollllllllll

email

Tags:
TRAI
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
DMCA.com Protection Status