அமேசான் சம்மர் சேல் சிறப்பு சலுகை 13 மே முதல் 16 வரை நடைபெறும்

அமேசான் சம்மர் சேல்  சிறப்பு சலுகை 13 மே முதல் 16 வரை நடைபெறும்
HIGHLIGHTS

அமேசான் சம்மர் சேலில் மொபைல் போனில் 40% தள்ளுபடியும் மற்றும் 50% தள்ளுபடி மற்ற எலக்ட்ரானிக் பொருட்களிலும் வழங்குகிறது

பிளிப்கார்ட் வெப்சைட்டில் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கிறது. பிளிப்கார்ட் சிறப்பு விற்பனை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அமேசான் தளத்திலும் சிறப்பு சலுகை விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமேசான் சம்மர் சேல் என பெயரிடப்பட்டுள்ள சிறப்பு விற்பனை மே 1-ம் தேதி துவங்கி மே 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதே தினங்களில் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையும் நடைபெறுகிறது. அமேசான் சிறப்பு விற்பனையில் மொபைல் போன்கள், நுகர்வோர் மின்சாதனங்கள், தொலைகாட்சிகள் மற்றும் பல்வேறு இதர பொருட்களுக்கு சிறப்பு விற்பனை மற்றும் சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன. 

சிறப்பு சலுகைகளில் விலை குறைப்பு, தள்ளுபடி மட்டுமின்றி வட்டியில்லா மாத தவனை முறை வசதி, கேஷ்பேக் மற்றும் எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதல் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அமேசான் சிறப்பு விற்பனை நாட்களில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பிரான்டுகளின் 40,000 டீல்கள் அறிவிக்கப்பட இருக்கின்றன. 

அமேசான் சம்மர் சேல் விற்பனையில் மொபைல் போன்களுக்கு அதிகபட்சம் 35% தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. ஹானர் 7X, நோக்கியா 7 பிளஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு சலுகைகள் வழங்கப்பட இருப்பது அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ரியல்மி 1 ஸ்மார்ட்போன் சிறப்பு விற்பனையில் முதல் முறையாக விற்பனைக்கு வரயிருக்கிறது. வரும் நாட்களில் சிறப்பு விற்பனையில் வழங்கப்பட இருக்கும் சலுகைகளின் மற்ற விவரங்கள் தெரியவரும்.

இதுமட்டுமின்றி அமேசான் செயலியை பயன்படுத்துவோருக்கு பிரத்யேக சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன. இவை விற்பனை நாட்களில் இரவு 8 மணிக்கு துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனையில் கலந்து கொள்வோரில் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள சிறப்பு பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன.

மொபைல் போன் உதிரிபாகங்களுக்கு அதிகபட்சம் 80% தள்ளுபடியும், அனைத்து மாடல் மொபைல் போன் கேஸ்களுக்கும் 75% தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. இதேபோன்று ப்ளூடூத் ஹெட்செட் சாதனங்களுக்கு 35%, பவர் பேங்க் சாதனங்களுக்கு 70% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

லேப்டாப் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ.20,000 வரை தள்ளுபடியும், கம்ப்யூட்டர் உதிரிபாகங்களுக்கு அதிகபட்சம் 50% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் கேமராக்கள், ஹெட்போன்கள், ஸ்பீக்கர்கள், ஃபிட்னஸ் டிராக்கர்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் ஸ்டோரேஜ் சாதனங்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன.

நான்கு நாட்கள் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் ரூ.250-க்கும் அதிகமாக பொருட்களை வாங்கி அமேசான் பே பேலன்ஸ் மூலம் பணம் செலுத்துவோருக்கு கூடுதலாக 10 சதவிகிதம் கேஷ்பேக் அதிகபட்சம் ரூ.300 வரை வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது கூடுதல் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo