Aadhaar Card இலவச அப்டேட் நீடிப்பு நீங்கள் வீட்டிலிருந்தபடி அனைத்து தகவலையும் சரி செய்யலாம்

Highlights

Aadhaar Card இலவச அப்டேட் செய்வதற்க்கான கால கெடுவை நீடித்துள்ளது

ஆன்லைன் டாக்யூமென்ட் அப்டேட் செய்வது ஜூன் 14 ,2027 வரை நீடிக்கப்பட்டுள்ளது

Aadhaar App மூலம் ஈமெயில் ஐடி அப்டேட் செய்வதற்க்கு, டிசம்பர் 31, 2026 வரை எந்த வித சார்ஜும் இல்லை

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) Aadhaar Card இலவச அப்டேட் செய்வதற்க்கான கால கெடுவை நீடித்துள்ளது myAadhaar போர்ட்டல் மூலம் ஆன்லைன் டாக்யூமென்ட் அப்டேட் செய்வது ஜூன் 14 ,2027 வரை நீடிக்கப்பட்டுள்ளது இதை தவிர UIDAI யின் புதிய Aadhaar App மூலம் ஈமெயில் ஐடி அப்டேட் செய்வதற்க்கு, டிசம்பர் 31, 2026 வரை எந்த வித சார்ஜும் இல்லை, மேலும் இந்த இரு தளங்களின் நன்மை வெவ்வேறு ஆகும், இதில் எந்த எந்த சேவைக்கு இலவச அப்டேட் என்பதை முழுசா பார்க்கலாம் வாங்க.

Aadhaar கார்டின் புதிய அப்டேட் கல்கேடு என்ன?

UIDAI-யின் படி, ஆதார் அட்டைதாரர்கள் myAadhaar வெப்சைட் மூலம் தங்களின் அடையாள மற்றும் முகவரி ஆவணங்களை இலவசமாகப் அப்டேட் செய்து கொள்ளலாம். இந்த அம்சத்திற்கான காலக்கெடு முதலில் ஜூன் 14, 2026 ஆக இருந்தது, ஆனால் இப்போது அது ஜூன் 14, 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டையைப் பெற்று, அதுவரை தங்களின் அடையாள அல்லது முகவரி ஆவணங்களைப் அப்டேட்செய்யாதவர்வர்களுக்கு இது குறிப்பாகப் பயனளிக்கும். இந்த அம்சத்தின் கீழ், அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்றை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.

உங்கள் மொபைல் போனிலிருந்து எப்படி அப்டேட் செய்வது?

உங்கள் ஆதார் ஆவணங்களை வீட்டிலிருந்தே புதுப்பிக்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  • உங்கள் மொபைலில் UIDAI-யின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டன https://myaadhaar.uidai.gov.in/ -ஐத் திறக்கவும் .
  • உங்கள் ஆதார் நம்பரை இங்கே உள்ளிட்டு, ரெஜிஸ்ட்டர் செய்யப்பட மொபைல் நம்பருக்கு வந்த OTP-ஐப் பயன்படுத்தி லோகின் செய்யவும் .
  • இப்போது டாக்யூமென்ட் அப்டேட் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • திரையில் காட்டப்படும் உங்கள் அடையாள மற்றும் முகவரித் தகவல்களைச் சரிபார்க்கவும்.
  • இதற்குப் பிறகு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்றுக்காகக் கிடைக்கும் ஆவணங்களிலிருந்து சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • தொடர்புடைய ஆவணங்களைப் அப்லோட் செய்து , தேவையான ரேகுவச்ட்க்கு அளித்து கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.
  • உங்கள் அப்ளிகேஷன் சமர்ப்பித்த பிறகு நீங்கள் பெறும் Service Request Number (SRN)பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இது, அப்டேட் ஸ்டேட்டஸ் சரிபார்க்க உங்களுக்கு உதவும்.

டாக்யூமென்ட் அப்லோட் செய்த பிறகு, UIDAI அவற்றைச் சரிபார்க்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ரேகுவஸ்ட் சமர்ப்பிப்பதாலேயே ஆதார் மாற்றம் உடனடியாகச் செயல்படுத்தப்பட்டுவிட்டது என்று அர்த்தமல்ல.

Email Id இலவச அப்டேட்

UIDAI யின் புதிய Aadhaar App மூலம் ஈமெயில் ஐடி சேர்ப்பது அல்லது பழைய ஐடியிலிருந்து புதிய ஈமெயில் அப்டேட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இந்த சேவைக்கு ரூ,75 வசுலிக்கப்படுகிறது, ஆனால் தற்பொழுது இந்த சேவையை அதாவது ஜூலை 1,2026 லிருந்து செப்டம்பர் 31,2026 வரை இலவசமாக பயன்படுத்தலாம்

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile

Recommended Articles