பைக் ரசிகர்களுக்காக 2020 அசத்தலான Suzuki ஹயபூசா இந்தியாவில் அறிமுகம்.

HIGHLIGHTS

திய 2020 சுசுகி ஹயபூசா மாடலின் துவக்க விலை ரூ. 13.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஹயபூசா மாடல் மெட்டாலிக் தண்டர் கிரே மற்றும் கேண்டி டேரிங் ரெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது

பைக்  ரசிகர்களுக்காக 2020  அசத்தலான Suzuki ஹயபூசா  இந்தியாவில் அறிமுகம்.

சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் 2020 ஹயபூசா மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2020 சுசுகி ஹயபூசா மாடலின் துவக்க விலை ரூ. 13.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த வேரியண்ட் பி.எஸ்.6 கெடு துவங்கும் வரை குறைந்த எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது. இவை தவிர மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. 2020 ஹயபூசா மாடலில் பி.எஸ்.4 ரக என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.. புதிய ஹயபூசா மாடல் மெட்டாலிக் தண்டர் கிரே மற்றும் கேண்டி டேரிங் ரெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது

2020 சுசுகி ஹயபூசா சிறப்பம்சம்.

சுசுகியின் புதிய 2020 ஹயபூசா மாடலில் 1340 சிசி இன்-லைன் நான்கு சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 197 பி.ஹெச்.பி. @9500 ஆர்.பி.எம். பவர் மற்றும் 155 என்.எம். டார்க் @7200 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்த சூப்பர் பைக் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.74 நொடிகளில் எட்டிவிடும். 

வரும் ஆண்டுகளில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய முற்றிலும் புதிய ஹயபூசா மாடலை உருவாக்கும் பணிகளில் சுசுகி நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முற்றிலும் புதிய சுசுகி ஹயபூசா சூப்பர்பைக் 2021 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo