இனி PUBG வேண்டாம் அதான் FAUG இந்தியாவில் அறிமுகம் ஆகியாச்சுல.

இனி  PUBG வேண்டாம் அதான் FAUG இந்தியாவில்  அறிமுகம் ஆகியாச்சுல.

FAUG கேம் இந்திய வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த கேமை உருவாக்கி வரும் என்கோர் கேம்ஸ் தனது பாஜி கேம்வெளியீட்டு விவரங்களை தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் அறிவித்து உள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

முன்னதாக  இந்த கேம் பற்றிய அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியானது. முன்னதாக இந்தியாவில் பப்ஜி கேமிற்கான தடை உத்தரவு வெளியானது. கேம் அறிவிப்பின் போது, இது அக்டோபர் மாத இறுதியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த கேம் வெளியீடு எதிர்பார்க்கப்பட்டவிட மேலும் தாமதமாகும் என தெரிகிறது

பாஜி – பியர்லெஸ் அண்ட் யுனைட்டெட் கார்ட்ஸ் என்ற விரிவாக்கம் கொண்ட கேம் நவம்பர் மாதம் வெளியாகிறது. மேலும் இந்த கேமின் 1 நிமிட டீசர் வீடியோவையும் என்கோர் கேம்ஸ் வெளியிட்டு உள்ளது. டீசரில் புதிய கேம் கிராபிக்ஸ் மற்றும் கேம்பிளே தெரியவந்துள்ளது. 

பாஜி கேம்பிளே கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெறும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், வெளியீட்டின் போது இந்த கேமில் பேட்டிள் ராயல் மோட் வழங்கப்படாது என பாஜி இணை நிறுவனர் விஷால் கோண்டல் தெரிவித்து இருக்கிறார்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile