அமேசானில் கேம் ஸ்ட்ரீமிங் சேவை.

HIGHLIGHTS

அமேசான் புதிய திட்டம் மூலம் கூகுள் ஸ்டேடியா சேவைக்கு போட்டியாக அமைகிறது.

அமேசானில்  கேம் ஸ்ட்ரீமிங் சேவை.

அமேசான் கேம் ஸ்டிரீமிங் சேவையின் முதல் கேம் அறிவியல் புனைகதை சார்ந்து உருவாகி இருக்கிறது. இந்த கேம் குரூசிபில் என அழைக்கப்படுகிறது. கேமிங் துறை கடந்த சில ஆண்டுகளில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. தற்சமயம் அமேசான் நிறுவனமும் கேமிங் துறையில் களமிறங்க முடிவு செய்துள்ளது. 
 
குரூசிபில் மட்டுமின்றி நியூ வொர்ல்டு பெயரில் மல்டி பிளேயர் கேம் ஒன்றை வெளியிடவும் அமேசான் திட்டமிட்டுள்ளது. குரூசிபில் கேமினை ரெலென்ட்லெஸ் எனும் நிறுவனம் 2014 ஆம் ஆண்டு முதல் உருவாக்கி வருகிறது. அமேசான் நீண்ட கால முதலீடு காரணமாக இது சாத்தியமாகி இருக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

நியூ வொர்ல்டு கேமினை ஐர்வைன் எனும் கேம் ஸ்டூடியோ உருவாக்கியுள்ளது. வீடியோ கேமிங் துறையில் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்களை கொண்டு வர அமேசான் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அமேசான் புதிய திட்டம் மூலம் கூகுள் ஸ்டேடியா சேவைக்கு போட்டியாக அமைகிறது. 

இத்துடன் இன்டராக்டிவ் கேம்களில் பயனர் மற்ற கேமர்களுடன் உரையாட ட்விட்ச் எனும் தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கென பிராஜக்ட் டெம்போ எனும் சேவையினை உருவாக்கி வருகிறது. இத்துடன் கேம் பிராசஸிங் என்ஜின் ஒன்றும் உருவாக்கப்பட்டு வருகிறது. லம்பர்யார்டு என அழைக்கப்படும் இந்த என்ஜின் அமேசானின் கிளவுட் கம்ப்யூட்டிங் பவர் மூலம் இயங்குகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo