Flipkart மொபைல் செயலியில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடா மொழிகளில் இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஃப்ளிப்கார்ட் செயலியில் இந்தி மொழிக்கான வசதி ஒன்பது மாதங்களுக்கு முன் சேர்க்கப்பட்டது.
Survey
✅ Thank you for completing the survey!
புதிய அனுபவத்தை செயல்படுத்த ஃப்ளிப்கார்ட் நிறுவனம் சுமார் 54 லட்சம் வார்த்தைகளை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடா போன்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது. மொழிமாற்றம் செய்யப்பட்ட வார்த்தைகளை ஃப்ளிப்கார்ட் தள விளம்பரம் மற்றும் இதர வலைப்பக்கங்களில் பயன்படுத்த இருக்கிறது.
புதிய மொழிகளை சேர்த்திருப்பதன் மூலம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க ஃப்ளிப்கார்ட் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக ஃப்ளிப்கார்ட் செயலி ஆங்கிலம் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் மட்டும் இயக்குவதற்கான வசதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.View Full Profile