JIO-FACEBOOK DEAL: RELIANCE JIO யில் 9.99 சதவிகிதம் வாங்கியது ஃபேஸ்புக.

JIO-FACEBOOK DEAL: RELIANCE JIO யில் 9.99 சதவிகிதம் வாங்கியது  ஃபேஸ்புக.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அங்கமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிட்டெட் நிறவனத்தின் 9.99 சதவீத பங்குகளை வாங்கி இருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக ஃபேஸ்புக் நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ. 43 ஆயிரம் கோடி (ரூ. 43,574 கோடி) கொடுத்திருக்கிறது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

நிறுவனம் ஒன்றின் மிக குறைந்த அளவு பங்குகளை வாங்க இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்திருக்கும் உலகின் முதல் நிறுவனமாக ஃபேஸ்புக் இருக்கிறது. இதுதவிர இந்திய தொழில்நுட்ப துறையின் மிகப்பெரும் அந்நிய நேரடி முதலீட்டாளராகவும் ஃபேஸ்புக் இருக்கிறது.

வாட்ஸ்அப் கொண்டு ஜியோமார்ட் மூலம் மக்களின் வீடுகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை சீராக வழங்க ஏதுவாக இருநிறுவனங்களும் பணியாற்றும் என கூறப்படுகிறது.

முதலீட்டின் அங்கமாக ஜியோ ஃபிளாட்பார்ம்ஸ், ரிலையன்ஸ் ரீடெயில் மற்றும் வாட்ஸ்அப் போன்றவை வணிக ரீதியில் கூட்டணி அமைத்து இருக்கின்றன. இந்த கூட்டணியில் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் புதிய வணிக வியாபாரமான ஜியோமார்ட் தளத்தை வாட்ஸ்அப் கொண்டு ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளன.

நெட்வொர்க்குகள், சாதனங்கள், பயன்பாடுகள், உள்ளடக்கம், சேவை அனுபவங்களை உள்ளடக்கிய ஒரு புதிய டிஜிட்டல் உலகத்தை ஜியோ உருவாக்கியுள்ளது – இந்த டிஜிட்டல் உலகம் இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் கிடைக்கிறது. நெருக்கடியான காலங்களில் கூட, கோவிட் -19, ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் சிறந்த சேவையை வழங்குவதன் மூலமும் மக்களின் நம்பிக்கையை வென்றதன் மூலமும் இந்தியாவின் "டிஜிட்டல் லைஃப்லைன்" என்ற பெருமையை அடைந்துள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile