சுதந்திர தினத்தில் கூலி படம் ஜாலியா குடும்பத்துடன் என்ஜாய் மற்றும் OTT ஸ்ட்ரீமிங் ஸ்பெஷல் அப்டேட் பாருங்க
ரஜினிகாந்த் மற்றும் நாகார்ஜுனா நடித்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் கூலி (Coolie) ஆகஸ்ட் 14க்கு தியேட்டரில் ரிலீஸ் ஆகியது இன்று சுதந்திர தினம் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவருக்கும் விடுமுறை என்பதால் உங்கள் குடும்பத்துடன் இந்த படத்தை பார்த்து மகிழலாம், மேலும் இது ஏற்கனவே பார்வையாளர்களிடமிருந்து அன்பான வரவேற்பைப் பெற்று வருகிறது.
Surveyரஜினிகாந்தின் ரசிகர்கள் முதல் காட்சியைப் பார்ப்பதற்கு முன்பு திரையரங்குகளுக்கு வெளியே டிரம்ஸ் மற்றும் பூக்களுடன் கொண்டாடுவதைக் காண முடிந்ததால், படம் சோசியல் மீடியாக்களில் பரபரப்பாகி வருகிறது. ஆன்லைன் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு அறிக்கைகளின்படி, படம் நல்ல ஓபனிங்கைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏற்கனவே உலகளவில் முன்பதிவு மூலம் ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளது இதை தவிர இந்த படம் ரிலீஸ் ஆகி 2 நாட்கள் மட்டும் ஆகிய நிலையில் தற்பொழுது OTT தகவல் வெளியாகியுள்ளது.
கூலி OTT தகவல்
கூலி OTT மீடியா அறிக்கையின்படி கூலி படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ வாங்கியுள்ளது. திரையரங்குகளில் திரையிடும் பணிகள் முடிந்த பிறகு, படம் திரைக்கு வரும், செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூலி படம் முதல் நாள் கலெக்ஷன்
இந்தவாரம் சுதந்திர தின விடுமுறையுடன், வெள்ளி சனி,ஞாயிறு விடுமுறை வருவதால் கூலி படத்திற்கு வசூல் அதிகளவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Whistles parakkattum across the UK! 💥📣#Coolie becomes the highest-grossing Tamil film in UK premieres, crossing £124 Thousand+#Coolie in theatres worldwide🌟@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir… pic.twitter.com/x3NfoCqXlL
— Sun Pictures (@sunpictures) August 14, 2025
இந்த நிலையில் முதல் நாளான இன்று இரவு 8 மணி தகவலின்படி உலகம் முழுவதும் கூலி திரைப்படம் சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதையும் படிங்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூலி அட்வான்ஸ் புக்கிங்கில் ரூ,50 கோடி வசூல்
கூலி படம் ஸ்டார்ஸ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பல மொழிகளில் சார்ந்த கலைஞர்கள் ஒரே இடத்தில் பார்க்கலாம் அதாவது இப்படத்தில் டோலிவுட்டில் இருந்து நாகார்ஜுனா, பாலிவுட்டில் இருந்து அமீர்கான், கன்னடத்தில் இருந்து உபேந்திரா, மலையாளத்தில் இருந்து சௌபின், மற்றும் ஸ்ருதிஹாசன், சத்யராஜ் போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதன் காரணமாகவே இந்த படம் அதிகம் எதிர்ப்பார்ப்பு உள்ளது.
Arangam chumma adhirudhilla💥🔥⚡ #Coolie #Coolie Mania Begins worldwide 🌟@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @Reba_Monica @monishablessyb @anbariv @girishganges @philoedit… pic.twitter.com/VV3oDRRZXz
— Sun Pictures (@sunpictures) August 14, 2025
கூலி கதை:- சைமன் (நாகார்ஜுனா) ஹாரிபரில் தயாள் (செளபின் சாஹிர்) தலைமையில் விலையுயர்ந்த வாட்ச்களை விற்பனை செய்வது போல இன்னொரு மிகவும் மோசமான பிசினஸை செய்து வருகிறார். அவர் கொன்று குவிக்கும் ஆட்களை அப்புறப்படுத்தும் பணி ராஜசேகருக்கு (சத்யராஜ்) வழங்கப்பட தனது 3 மகள்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அந்த மோசமான வேலையை செய்கிறார். மேலும், அங்கே நடக்கும் விஷயங்களை அம்பலப்படுத்த நினைக்கும் அவரை கொன்று விடுகின்றனர். தனது நண்பனை கொன்றவர்களை கண்டுபிடித்து பழிவாங்க களமிறங்கும் தேவா தனது நண்பனின் 3 மகள்களையும் காப்பாற்ற போராட கடைசியில் என்ன ஆனது என்பது தான் கூலி படத்தின் கதை.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
