India Lockdown :சோசியல் மீடியா தளங்கள் பயன்படுத்துவர் எண்ணிக்கை அதிகரிப்பு..

India Lockdown :சோசியல் மீடியா தளங்கள் பயன்படுத்துவர் எண்ணிக்கை அதிகரிப்பு..

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது. இதனால் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து, வேறு காரணங்களுக்காக வெளியே செல்ல முடியாமால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
 
குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களின் பயன்பாடு கடந்த வாரத்தை விட 87 சதவீதம் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த காலகட்டத்தில் பெரும்பாலானோர் சமூகவலைதளங்களிலேயே பொழுதை போக்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதுதொடர்பாக மும்பை, பெங்களூர் மற்றும் சென்னையில் 1300 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 72 சதவீதம் பேர் இண்டர்நெட்டில் கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை தேடிப்பார்ப்பதும், 76 சதவீதம் பேர் காலை 8 மணி முதல் 9 மணி வரை டி.வி. பார்ப்பதும், 89 சதவீதம் பேர் ரேடியோ கேட்பது மற்றும் இசை சம்பந்தமான செயலிகளில் பொழுதை போக்குவதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் சராசரியாக ஒருவர் 150 நிமிடங்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்த நிலையில், ஊரடங்கு உத்தரவின் முதல் வாரத்தில் சராசரி பயன்பாடு சதவீதம் 280 நிமிடங்களாக உயர்ந்துள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile