கூகுள் குரோம் எக்ஸ்டென்ஷன்களை பதிவிறக்கம் செய்யும் போது எச்சரிக்கை.

HIGHLIGHTS

உலகின் முன்னணி சர்ச் சேவைகளில் ஒன்றான கூகுள் நிறுவனத்தின் கூகுள் குரோம் எக்ஸ்டென்ஷன்களை பதிவிறக்கம் செய்யும் போது மிகவும் எச்சரிக்கை

பயனாளர்களின் தகவல்களைத் திருடும் 100க்கும் மேற்பட்ட தீங்கிழைக்கும் மால்வேர் இணைப்புகளை கூகுள் நிறுவனம்

உலகின் முன்னணி சர்ச் சேவைகளில் ஒன்றான கூகுள் நிறுவனத்தின் கூகுள் குரோம் எக்ஸ்டென்ஷன்களை பதிவிறக்கம் செய்யும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய அரசின் இணைய பாதுகாப்பு நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவில் இனணயவழி (சைபர்) தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதற்கும், இணைய வழித்தடத்தை பாதுகாப்பதற்கும் தேசிய தொழில்நுட்பக் குழுவான இந்திய கம்ப்யூட்டர் அவசரநிலை பதில் குழு (சி.இ.ஆர்.டிஇன்) செயல்படுகிறது. 

பயனாளர்களின் தகவல்களைத் திருடும் 100க்கும் மேற்பட்ட தீங்கிழைக்கும் மால்வேர் இணைப்புகளை கூகுள் நிறுவனம் சமீபத்தில் அதிரடியாக நீக்கியது. இதைத் தொடர்ந்தே மத்திய அரசு இந்த எச்சரிக்கையை விடுத்து இருக்கிறது.

மத்திய அரசின் இணைய பாதுகாப்பு நிறுவனமாக இந்த நிறுவனம் இணைய பயனர்களுக்கு முற்றிலும் தேவைப்படும் எக்ஸ்டென்ஷன்களை மட்டுமே நிறுவவும், அவ்வாறு செய்வதற்கு முன்பு பயனர் மதிப்புரைகளைப் பார்க்கவும் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் பயன்பாட்டில் இல்லாத எக்ஸ்டென்ஷன்களை நீக்கம் செய்ய வேண்டும், பயனர்கள் சரிபார்க்கப்படாத தளங்களில் இருந்து எக்ஸ்டென்ஷன்களை நிறுவக்கூடாது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :