தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பேஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் முப்பத்தி எட்டு கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
அதைப்போல் பீஸ்ட்டுக்கு போட்டியாக வெளியான கே ஜி எஃப் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரம்மாண்டத்தின் உச்சமாக இத்திரைப்படம் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ரசிகர்கள் பீஸ்ட் திரைப்படத்தை காண்பதை காட்டிலும் கேஜிஎப் திரைப்படத்திற்கு அதிக ஆர்வம் காட்டுவதால் தற்போது பீஸ்ட்டுக்கு நிகராக திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான பீஸ்ட் திரைப்படம், ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்கிற்கு ஏப்ரல் 13-ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்தத் திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவியதால் தமிழகத்தில் உள்ள 800 திரையரங்குகள் இந்த திரைப்படத்திற்கு ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் யஷ் நடிப்பில் உருவான கன்னட திரைப்படமான கேஜிஎப்பீஸ்ட் திரைப்படம் வெளியாகிய அடுத்த நாளான, ஏப்ரல் 14-ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவிய போதும், 250 திரையரங்குகள் வரை மட்டுமே ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டது. ஆனால் பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்க்கப்பட்டதை விட மோசமான விமர்சனங்களை பெற்ற நிலையில், முதல் நாளிலேயே கேஜிஎப் திரைப்படத்திற்கு ஏறத்தாழ 100 திரையரங்குகள் உயர்த்தி 350 திரையரங்குகள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இரண்டு படங்களில் ரசிகர்களைக் கவர்ந்த திரைப்படம் எது என்பது குறித்த ஓட்டெடுப்பு கலக்கல் சினிமாவின் சமூக வலைதளப் பக்கங்களில் தொடங்கியுள்ளது. ஓட்டளிக்க விரும்புவோர் ஓட்டளிக்கலாம். முடிவுகள் நாளை மதியம் அறிவிக்கப்படும்.