தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகராக திகழும் விஜய் 'மாஸ்டர்' திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் .இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 13ம் தேதி வெளியாகவுள்ளது.
தளபதி 65 படம் என்றழைக்கப்பட்டு வந்த பீஸ்ட் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதையடுத்து பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் இறுதி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தது. இப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது.
இதையடுத்து காதலர் தினத்தன்று பீஸ்ட் படத்திலிருந்து வெளியான அரபிக் குத்து பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது. சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இப்பாடலை அனிருத்தும், ஜோனிடா காந்தியும் இணைந்து பாடியுள்ளனர். பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் அரபிக் குத்துபாடலுக்கு நடனமாடி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் 'பீஸ்ட்' படத்தின் டிரைலர் வருகிற ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஜாலியோ ஜிம்கானா என்ற பீஸ்ட் படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியானது. விஜய் பாடியிருந்த இந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் படம் வரும் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகும் என அறிவித்தனர் படக்குழுவினர். இதனால் பீஸ்ட் படத்தின் டீசர் அல்லது ட்ரைலரை எதிர்பார்த்து காத்திருந்தனர் ரசிகர்கள். தற்போது இதற்கான பதில் கிடைத்துள்ளது.
The much-awaited #BeastTrailer is releasing on April 2nd @ 6 PM
Namma aattam inimey vera maari irukum