பைக் பிரியர்களுக்கென புதிய நிறத்தில் வெளியாகும் பல்சர் பைக்

HIGHLIGHTS

இந்தியாவில் முன்னணி ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக பஜாஜ் உள்ளது

பஜாஜ் பல்சர் 250 பைக்கிற்கு பெருமளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் 250 பைக்கிற்கு புதிய நீல நிறத்தேர்வை கொண்டு வந்துள்ளது

இந்தியாவில் முன்னணி ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக பஜாஜ் உள்ளது. பஜாஜ் வெளியிடும் பல்சர் பைக்குகளுக்கு ரசிகர்கள் அதிகம். தற்போது பஜாஜ் பல்சர் 250 பைக்கிற்கு பெருமளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் 250 பைக்கிற்கு புதிய நீல நிறத்தேர்வை கொண்டு வந்துள்ளது. இதற்கு முன் பல்சர் 250 பைக்கிற்கு ரேசிங் ரெட் மற்றும் டெக்னோ கிரே ஆகிய 2 நிறங்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நீலமும் சேர்க்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள புதிய நீல நிறம் மோனோ டோன் ஃபினிஷிங் மற்றும் சில இடங்களில் கிரே மற்றும் வெள்ளை ஃபேரிங்கில் ஹைலைட் செய்யப்பட்டுள்ளது. மேலும் மற்ற நிற பைக்குகளில் இருப்பது போலவே இன்ஜின் கவுலிலும் நீல நிறம் கிடைக்கும்.

தற்போது குறிப்பிட்ட டீலர்களிடம் மட்டுமே கிடைக்கும் இந்த நீல நிறத்தேர்வு, விரைவில் இந்தியா முழுவதும் கிடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நிறத் தேர்வுக்கு தனியாக விலை இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஏற்கனவே இருக்கும் எக்ஸ் ஷோரூம் விலையான ரூ.1,40,915-க்கு இந்த பைக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :