இந்தியாவில் முதல் முறையாக 11.2.4 சேனல் சப்ப்ர்டுடன் Zebronics பவர்புல் Soundbar அறிமுகம் Dolby Atmos, DTS:X பக்கவான வைப்

HIGHLIGHTS

Zebronics இந்தியாவில் புதிய soundbar அறிமுகம் செய்துள்ளது,

இது இந்தியாவில் முதல் முறையாக 11.2.4 சேனல் சப்போர்ட் கொண்ட சவுண்ட்பார் கொண்டு வந்துள்ளது

இந்த சவுண்ட்பாரின் பெயர் Zeb-Juke Bar 11000 ஆகும்

இந்தியாவில் முதல் முறையாக 11.2.4 சேனல் சப்ப்ர்டுடன் Zebronics பவர்புல் Soundbar அறிமுகம் Dolby Atmos, DTS:X பக்கவான வைப்

Zebronics இந்தியாவில் புதிய soundbar அறிமுகம் செய்துள்ளது, இது இந்தியாவில் முதல் முறையாக 11.2.4 சேனல் சப்போர்ட் கொண்ட சவுண்ட்பார் கொண்டு வந்துள்ளது இந்த சவுண்ட்பாரின் பெயர் Zeb-Juke Bar 11000 ஆகும் இதில் 1610W RMS சப்போர்டுடன் இது மிக சிறந்த ஆடியோ சப்போர்ட் வழங்கும் மேலும் இந்த சவுண்ட்பாரின் விலை மற்றும் அம்சம் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Zebronics Juke Bar 11000 விலை தகவல்

Zebronics Juke Bar 11000, இந்தியாவில் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் மூலம் ரூ. 69,999 (~$740) என்ற அறிமுக விலையில் கிடைக்கிறது. இந்த விலையில், அதன் 11.2.4-சேனல் ஆடியோ, இரட்டை பெரிய சப்வூஃபர்கள், மற்றும் டால்பி அட்மாஸ் மற்றும் DTS:X ஆதரவு ஆகியவற்றின் கலவையானது, இதை உயர்தர வீட்டு பொழுதுபோக்கு அமைப்புகளுடன் போட்டியிட வைக்கிறது.

Zebronics Juke Bar 11000 சிறப்பம்சம்.

Zebronics யின் Zeb-Juke Bar 11000 சவுண்ட்பாரின் அம்சங்கள் பற்றி பேசினால், இது மிக சிறந்த ஆடியோ சிஸ்டம் ஆகும். இதில் 11.2.4 சேனல் சப்போர்டுடன் 1,610W RMS அவுட்புட்டுடன் இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட சவுண்ட்பார் ஆகும்.இந்த அமைப்பு, பரந்த மற்றும் முப்பரிமாண ஒலித்தளத்தை உருவாக்க 11 டிரைவர்களைப் பயன்படுத்துகிறது, அதே நேரத்தில், செப்ரானிக்ஸின் தனியுரிமமான ஜெப் அக்கூஸ்டிமேக்ஸ் பிராசஸிங், மிகவும் சமச்சீரான ஆடியோ அனுபவத்திற்காக சேனல்கள் முழுவதும் ப்ரீகுவன்ஷிகளைச் சரிசெய்கிறது.

லோ ப்ரீகுவன்ஷி வெளியீடானது, இரண்டு 20.32 செ.மீ சப்வூஃபர்களிலிருந்து வருகிறது. இவை , அதிரடிக் எக்ஷன் மற்றும் இசைக்கு மேலும் தாக்கத்தைச் சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த டிசைன் Dolby Atmos மற்றும் DTS:X, ஆகிய இரண்டையும் சப்போர்ட் செய்கிறது, இணக்கமான கன்டென்ட் அதிக தீப் மற்றும் திசைசார் எபக்ட்களுடன் அனைத்து டேரேக்ஷனிலும் மிக சிறந்த சவுண்டை வழங்க முடிகிறது.

இதையும் படிங்க 1030W சவுண்ட் எபக்ட் உடன் வரும் இந்த பவர்புல் Zebronics Soundbar இந்த விநாயகர் சதுர்த்திக்கு பக்கா வைப் தரும்

இந்த சவுண்ட்பார் மிகவும் ஸ்லிம்மாக இருப்பதால் இதை எளிதாக சுவரில் மாற்றக்கூடிய அளவில் ( wall-mounted) அம்சத்துடன் வருகிறது இதனுடன் இந்த சவுண்ட்பாரில் LED டிஸ்ப்ளே உடன் மிக சிறந்த தெளிவை தருகிறது, இதனுடன் இந்த சவுண்ட்பாரில் மேக்னேட்டிக் டோக்கிங் ரிமோட் (magnetic docking remote) அம்சம் வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் அம்பியன்ட் லைட்டிங் எபக்ட் வழங்குகிறது. பார்ட்டிகள் மற்றும் பிற ஊடாடும் பயன்பாடுகளுக்காக, கரோக்கி (karaoke) மற்றும் சாதாரண இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற UHF வயர்லெஸ் மைக்ரோஃபோனை Zebronics வழங்குகிறது.

ஜுக் பார் 11000, ட்ரூ வயர்லெஸ் ஹோம் ஆடியோவையும் ஆதரிக்கிறது. இதன் மூலம், ஒரு பெரிய ஒத்திசைக்கப்பட்ட அமைப்பிற்காக, இணக்கமான ஸ்பீக்கர்களை இணைக்க முடியும். இணைப்பு விருப்பங்களில் புளூடூத் 5.3, டிவி eARC, ஆப்டிகல் இன், USB மற்றும் AUX ஆகியவை அடங்கும். இவை தொலைக்காட்சிகள், ஸ்மார்ட்போன்கள், கேமிங் கன்சோல்கள் மற்றும் பிற சாதனங்களை இணைக்க உதவுகின்றன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile