OnePlus AI ட்ரேன்ஸ்லேஷன் அம்சம் கொண்ட Nord Buds 4 அறிமுகம் 54 மணி நேரம் வரையிலான மிக சிறந்த பேட்டரி பேக்கப்
ஒன்பிளஸ் தனது புதிய இயர்பட்ஸான OnePlus Nord Buds 4 இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது
நார்ட் பட்ஸ் 4, 12mm டைட்டானியம் பினிஷ் டைனமிக் டிரைவர்களைக் கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 4 இந்தியாவில் ரூ,3,299 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய இயர்பட்ஸான OnePlus Nord Buds 4 இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நார்ட் பட்ஸ் 4, 12mm டைட்டானியம் பினிஷ் டைனமிக் டிரைவர்களைக் கொண்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் 52dB வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) மற்றும் டிரான்ஸ்பரண்ட் மோட் உடன் வருகின்றன. மேலும், இதில் AI டிரான்ஸ்லேட் வடிவில் ஒரு தனிப்பட்ட மொழிபெயர்ப்பாளரும் அடங்கும் மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.
SurveyOnePlus Nord Buds 4 விலை தகவல்
ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 4 இந்தியாவில் ₹3,299 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அறிமுகச் சலுகையின் கீழ் இவற்றை ₹3,099-க்கு வாங்கலாம். இந்த இயர்பட்ஸ் ஸ்டெல்லர் பிளாக் மற்றும் ஆஸ்ட்ரல் டீல் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். இவை ஜூன் 29 முதல் ஒன்பிளஸ் இந்தியா இணையதளம், ஒன்பிளஸ் ஸ்டோர் செயலி, ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர், அமேசான், ஃபிளிப்கார்ட், பிளிங்கிட், மிந்த்ரா மற்றும் நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனைக்கு வரும்.

OnePlus Nord Buds 4 சிறப்பம்சம்
ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 4, 12mm டைட்டானியம் பிநிஷுடன் டைனமிக் டிரைவர்களைக் கொண்டுள்ளது. கனெக்ஷன் விருப்பங்களில் புளூடூத் 6.1, SBC மற்றும் AAC கோடெக்குகள் அடங்கும். இந்த இயர்பட்ஸ்கள் 52dB வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) மற்றும் டிரான்ஸ்பரண்ட் மோடுடன் வருகின்றன. தெளிவான கால்களுக்காக , ஆறு மைக்ரோஃபோன்கள் (ஒரு இயர்பட்ஸிற்கு மூன்று மைக்ரோஃபோன்கள்) மற்றும் AI கால் நாய்ஸ் கேன்சலேஷன் ஆகியவை உள்ளன. இதில் ஒரு AI அசிஸ்டன்ட் உள்ளது, அதை நீங்கள் இயர்பட்ஸ்களைத் தட்டுவதன் மூலம் செயல்படுத்தலாம்.
இதையும் படிங்க boAt இந்தியாவில் அறிமுகம் செய்தது புதிய ஓபன் இயர் இயர்பட்ஸ் விலை மற்றும் அம்சங்கள் பாருங்க
இதன் மூலம் அலாரங்கள், நினைவூட்டல்கள், வானிலை மற்றும் AI நோட்டிபிகேஷன்களை கைகள் பயன்படுத்தாமலேயே அணுகலாம். AI டிரான்ஸ்லேட் ஒரு தனிப்பட்ட டிரான்ஸ்லேட் வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பிளஸ் ஃபோன்களுடன் பயன்படுத்தும்போது நிகழ்நேர மொழிபெயர்ப்பு கிடைக்கிறது. பாடல்களை மாற்றுவதற்கும், வொயிஸ் அசிஸ்டன்ட் மற்றும் ப்ளே/பாஸ் செய்வதற்கும் தொடு கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இயர்பட்ஸ்களில் 62mAh பேட்டரியும், கேஸில் 530mAh பேட்டரியும் உள்ளன. ANC ஆன் செய்யப்பட்டிருக்கும்போது, இயர்பட்ஸ்களின் பேட்டரி 6.5 மணிநேரம் வரையிலும், கேஸுடன் 27 மணிநேரம் வரையிலும் நீடிக்கும். ANC ஆஃப் செய்யப்பட்டிருக்கும்போது, இயர்பட்ஸ்களின் பேட்டரி 13 மணிநேரம் வரையிலும், கேஸுடன் 54 மணிநேரம் வரையிலும் நீடிக்கும். ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 10 நிமிட சார்ஜில் 11 மணிநேரம் வரை ம்யூசிக் கேட்கலாம். இந்த இயர்பட்ஸ்கள் வியர்வை மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்டிர்க்காக IP55 ரேட்டிங் பெற்றுள்ளன. அளவுகள்: இயர்பட்ஸ்கள் 29.56 mm நீளம், 19.69 mm அகலம், 22.63 மிமீ தடிமன் கொண்டவை மற்றும் 4.3 கிராம் எடை உடையவை. சார்ஜிங் கேஸ் 59.23 mm நீளம், 49.00 mm அகலம், 26.51 mm திக்னஸ் கொண்டது மற்றும் 42.5 கிராம் எடை உடையது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
