boAt இந்தியாவில் அறிமுகம் செய்தது புதிய ஓபன் இயர் இயர்பட்ஸ் விலை மற்றும் அம்சங்கள் பாருங்க
boAt இந்திய சந்தையில் அதன் புதிய boAt Airdopes ProClip அறிமுகம் செய்தது, இந்த இயர்பட்ஸ் ஓபன்-இயர்பட்ஸ் ஆகும் , இது இந்தியருக்கவே சிறப்பான டிசைனில் அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் இந்த இயற்பட்சில் boAt Lifestyle மற்றும் Dixon Technologies போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது மேலும் இதன் விலை மற்றும் மற்ற அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.
SurveyboAt Airdopes ProClip விலை தகவல்
boAt Airdopes ProClip விலை ரூ,1,599க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த இயற்பட்சை இவை வெள்ளை, சாம்பல் மற்றும் வைன் (wine) போன்ற பல்வேறு வண்ண விருப்பங்களில் கிடைக்கின்றன. இந்த இயர்பட்களை boAt-இன் அதிகாரப்பூர்வ வெப்சைட் மற்றும் Amazon, Flipkart போன்ற முக்கிய விற்பனைத் தளங்களில் வாங்கலாம்.
boAt Airdopes ProClip சிறப்பம்சம்.
boAt Airdopes ProClip அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 12mm டிரைவர் வழங்கப்படுகிறது மேலும் இதில் 500mAh பேட்டரி வழங்கப்படுகிறது , மேலும் ஒவ்வொரு இயர்பட்டிலும் 50mAh பேட்டரியும் உள்ளன. கேஸுடன் சேர்த்து பேட்டரி 52 மணி நேரம் வரை பேட்டரி நீடிக்கும் என்று boAt நிறுவனம் கூறுகிறது. வியர்வை மற்றும் ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்க இதற்கு IPX4 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இதில் காற்று கடத்தும் தொழில்நுட்பம் உள்ளது. ஒவ்வொரு இயர்பட்டும் 4.6 கிராம் எடை கொண்டது. இதில் புளூடூத் v6.0 பொருத்தப்பட்டுள்ளது. நிறுவனம் இந்த இயர்பட்களுக்கு 1 வருட வாரண்டியும் வழங்குகிறது. இதில் AI மூலம் இயங்கும் ENC உள்ளது. இதில் மல்டி-பாயிண்ட் இணைப்பு வசதி உள்ளது. இது boAt hearables செயலியுடன் இணக்கமானது, இது பேட்டரி நிலை, அமைப்புகள், தொடு கட்டுப்பாடுகள் போன்ற பல்வேறு தகவல்களை வழங்குகிறது.
இதையும் படிங்க Nothing புதிய போன் விரைவில், முழுக்க இது ட்ரேன்ஸ்பரென்ட் டிசைன் இருக்கும்
ஏர்டோப்ஸ் ப்ரோகிளிப், மிக இலகுவான கட்டமைப்பைக் கொண்ட, காதில் கச்சிதமாகப் பொருந்தும் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது உறுதியான பிடிப்புக்காக, பாதுகாப்பான வளைய அமைப்புடன் வருகிறது. மிக முக்கியமாக, இது நாள் முழுவதும் அணியும் வசதியை வழங்குகிறது. இதில், குறைந்த ஒலி கசிவுக்கான சோனிக் சீல் தொழில்நுட்பமும், சுற்றுப்புறத்தை நன்கு உணர்வதற்கான ஆம்பியன்ட் சவுண்ட் அவேர்னஸ் தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளன. இதன் திறந்த காது வடிவமைப்பு, நீண்ட நேரம் வசதியாகப் பயன்படுத்த உதவுகிறது. இந்த இயர்பட்ஸ், உடற்பயிற்சிகள், பயணம் மற்றும் அன்றாடச் செயல்பாடுகளுக்கு ஒரு சிறந்த தேர்வாகும். அசைவின்போதும், தீவிரமாகப் பயன்படுத்தும்போதும் இவை பாதுகாப்பான பொருத்தத்தை வழங்குகின்றன.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
