புதிய JBL கேமிங் ஹெட்செட் சீரிசை அறிமுகம்

புதிய JBL கேமிங் ஹெட்செட் சீரிசை அறிமுகம்
HIGHLIGHTS

JBL நிறுவனம் இந்திய சந்தையில் கேமிங் ஹெட்செட் சீரிசை அறிமுகம் செய்துள்ளது.

புதிய கேமிங் ஹெட்செட்களில் ஜெபிஎல் நிறுவனத்தின் குவாணடம் சவுண்ட் சிக்னேச்சர் வழங்கப்பட்டு இருக்கிறது

JBL நிறுவனம் இந்திய சந்தையில் கேமிங் ஹெட்செட் சீரிசை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜெபிஎல் குவாண்டம் சீரிசில் மொத்தம் ஆறு ஹெட்செட்கள் அறிமுகமாகி இருக்கின்றன.

புதிய JBL குவாண்டம் கேமிங் ஹெட்செட் சீரிஸ், குவாண்டம் 100 பேஸ் மாடலின் விலை ரூ. 3999 என துவங்கி டாப் எண்ட் ஃபிளாக்ஷிப் குவாண்டம் ஒன் மாடல் ரூ. 29999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய கேமிங் ஹெட்செட்களில் ஜெபிஎல் நிறுவனத்தின் குவாணடம் சவுண்ட் சிக்னேச்சர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் மொத்தம் ஆறு ஹெட்செட் மாடல்கள் உள்ளன. இவை பொழுதுபோக்கு கேமர்கள் மற்றும் போட்டிகளில் பங்கேற்கும் கேமர்களுக்கென பிரத்யேக ஆப்ஷன், வையர்டு மற்றும் வயர்லெஸ் ஆப்ஷன்களை கொண்டிருக்கின்றன.

விலை உயர்ந்த குவாண்டம் 600, குவாண்டம் 800 மற்றும் குவாண்டம் ஒன் மாடல்களில் பிரீமியம் லெதர் ராப் செய்யப்பட்ட மெமரி ஃபோம் இயர் குஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து ஹெட்செட்களிலும் ஃப்ளிப்-அப் அல்லது கழற்றக்கூடிய பூம் மைக்ரோபோன்களுடன் எக்கோ கேன்சலிங் தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றன.

ஜெபிஎல் குவாண்டம் சீரிஸ் கேமிங் ஹெட்செட்கள் கணினி, மேக், எக்ஸ்பாக்ஸ், பிளேஸ்டேஷன், நின்டென்டோ ஸ்விட்ச், மொபைல் மற்றும் விஆர் என பல்வேறு தளங்களுக்கான சப்போர்ட் கொண்டிருக்கிறது. புதிய குவாண்டம் 100, குவாண்டம் 200, குவாண்டம் 300 மாடல்களில் பியு லெதர்-ராப் செய்யப்பட்ட மெமரி ஃபோம் இயர் குஷன்களை கொண்டிருக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo