Dolby Atmos மற்றும் MultiBeam 3.0 சப்போர்டுடன் JBL Bar யின் Soundbar ஆண்டு விழா ஸ்பெஷல் அறிமுகம் இனி பக்கவான வைப் தான்

HIGHLIGHTS

JBL அதன் புதிய Bar MK2 சீரஸ் soundbar இந்தியாவில், அதாவது அதன் 80 ஆண்டு விழாவை முன்னிட்டு அறிமுகம் செய்துள்ளது

JBL Bar 1300MK2, 1000MK2, 800MK2 மற்றும் 500MK2, ஆகியவை அடங்கும்

மிக சிறந்த ஆடியோ சவுண்ட் எபக்ட்க்கு Dolby Atmos மற்றும் MultiBeam 3.0 மிக சிறந்த ஆடியோ வழங்குகிறது

JBL அதன் புதிய Bar MK2 சீரஸ் soundbar இந்தியாவில், அதாவது அதன் 80 ஆண்டு விழாவை முன்னிட்டு அறிமுகம் செய்துள்ளது. இந்த சீரிஸின் கீழ் JBL Bar 1300MK2, 1000MK2, 800MK2 மற்றும் 500MK2, ஆகியவை அடங்கும் இதில் மிக சிறந்த ஆடியோ சவுண்ட் எபக்ட்க்கு Dolby Atmos மற்றும் MultiBeam 3.0 மிக சிறந்த ஆடியோ வழங்குகிறது மற்றும் இதன் ஹயர் எண்டு மாடலில் எளிதாக பிரிக்கும் வகையில் வயர்லஸ் சரவுண்ட் ஸ்பீக்கர் உடன் இதில் 750W லிருந்து 2,470W, வரையிலான மாடல் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது மேலும் இதன் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க.

JBL Bar 1300MK2, 1000MK2, 800MK2 and 500MK2 விலை தகவல்

JBL Bar 1300MK2-ன் விலை ரூ. 1,74,999, Bar 1000MK2- ன் விலை ரூ. 1,49,999, Bar 800MK2- ன் விலை ரூ. 1,24,999 மற்றும் Bar 500MK2- ன் விலை ரூ. 64,999 ஆகும். இந்த சவுண்ட்பார்கள் இந்தியா முழுவதும் JBL.com, தேர்ந்தெடுக்கப்பட்ட ரீடைளர் விற்பனைக் கடைகள் மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் வழியாகக் கிடைக்கின்றன.

JBL Bar 1300MK2, 1000MK2, 800MK2 and 500MK2 சிறப்பம்சம்

JBL Bar யின் இந்த அணைத்து மாடலிலும் Dolby Atmos, DTS பார்மட் மற்றும் JBL யின் MultiBeam 3.0 டெக்னாலஜி மிக சிறந்த ஆடியோ வழங்குகிறது மேலும் இந்த JBL Bar 1300MK2 யில் 2,470W வரையிலான அவுட்புட் 11.1.4-சேனல் செட்டப் மற்றும் இதில் இரண்டு 8-இன்ச் கொண்ட சப்வூபார் வழங்கப்படுகிறது. அதுவே இதன் JBL Bar 1000MK2 யில் 7.1.4- சேனல் சப்போர்டுடன் 960W அவுட்புட் மற்றும் 10-இன்ச் வரையிலான சபவூபார் வழங்கப்படுகிறது.

இதன் அடுத்தபடியாக JBL Bar 800MK2 யில் 780W உடன் இதில் 7.1-சேனல் சப்போர்ட் வழங்குகிறது மற்றும் இதில் 10-இன்ச் சப்வூபார் வழங்கப்படும், அதுவே இதன் 500MK2 யில் 750W அவுட்புட்டுடன் 5.1 சேனல் சப்போர்ட் செட்டப் வழங்குகிறது.

இதையும் படிங்க தருமாறு சவுண்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் உடன் வரும் பெஸ்ட் Soundbar உங்கள் வீட்டை ஆக்கிடும் சினிமா தியேட்டர்

JBL Bar 1300MK2, 1000MK2, மற்றும் 800MK2 ஆகியவை பிரிக்கக்கூடிய வயர்லெஸ் சரவுண்ட் ஸ்பீக்கர்களை வழங்குகின்றன, அதே சமயம் 500MK2 மாடலில் நிலையான ஸ்பீக்கர் அமைப்பு உள்ளது. 1300MK2 மற்றும் 1000MK2 மாடல்களில் உண்மையான டால்பி அட்மாஸ் வெளியீட்டிற்காக அப்-ஃபயரிங் டிரைவர்கள் உள்ளன, அதேசமயம் 800MK2 மாடல் டால்பி அட்மாஸை DTS Virtual:X உடன் இணைக்கிறது. இந்த வரிசை முழுவதும், ஆடியோ துல்லியத்தை மேம்படுத்துவதாகக் கூறப்படும் SmartDetails மற்றும் தெளிவான உரையாடலுக்கான PureVoice 2.0 ஆகியவற்றை JBL சேர்த்துள்ளது, அதே நேரத்தில் வலுவான பேஸ் பர்போமன்சுக்கு AI Sound Boost ஆனது 1300MK2 மாடலுக்கு மட்டுமே பிரத்யேகமானது.

இந்த சவுண்ட்பார்கள், செட்டிங் , ஈக்யூ சரிசெய்தல் மற்றும் சாப்ட்வேர் அப்டேட்களுக்காக ஜேபிஎல் ஒன் (JBL One) ஆப் சப்போர்ட் செய்கிறது . மேலும், அவை ஏர்பிளே (AirPlay), கூகுள் காஸ்ட் (Google Cast), ஸ்பாட்டிஃபை கனெக்ட் (Spotify Connect), டைடல் கனெக்ட் (Tidal Connect) மற்றும் ரூன் ரெடி (Roon Ready) வழியாக ஸ்ட்ரீமிங் தளங்களுடனும் செயல்படுகின்றன. கனெக்ஷனுக்கு திவாசி மூலம் வொயிஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் கிடைக்கிறது

கனெக்ஷன் விருப்பங்களில் HDMI eARC, HDMI input , புளூடூத் 5.3, வைஃபை, ஆப்டிகல் input மற்றும் USB ஆகியவை அடங்கும். உயர் ரக மாடல்கள் பல HDMI இன்புட்களையும் 4K டால்பி விஷன் பாஸ்-த்ரூ ஆதரவையும் வழங்குகின்றன. மேலும், அவை இரவு நேரக் கேட்கும் மாட் , பிரிக்கக்கூடிய யூனிட்களில் வயர்லஸ் ஸ்பீக்கர் பயன்பாடு மற்றும் குறைந்த ஸ்டாண்ட்பை மின் நுகர்வு ஆகியவற்றுடனும் வருகின்றன. JBL பார் 1300MK2, ஆராகாஸ்ட் கனெக்ஷனை சப்போர்ட் செய்கிறது.

JBL Bar 1300MK2 முழு யூனிட்டின் சைஸ்களில் 1404 x 58 x 136 mm ஆகும், அதே சமயம் Bar 1000MK2-ன் அளவுகள் 1203 x 52 x 128 mm மற்றும் Bar 800MK2-ன் அளவுகள் 1163 x 52 x 128 mm ஆகும். Bar 500MK2 சவுண்ட்பாரின் அளவு 940 x 50.5 x 104 mm ஆகும். அனைத்து மாடல்களிலும் வயர்லெஸ் சப்வூஃபர்கள் உள்ளன மற்றும் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட ஆடியோவிற்கான ரூம்-அளவீட்டு அம்சங்களை சப்போர்ட் செய்கிறது .

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :