72 மணி நேரம் பேட்டரி பேக்கப் உடன் Redmi யின் புதிய ஹெட்போன் அறிமுகம், 42dB ANC அம்சம் கொண்டிருக்கும்
Xiaomi யின் சப் ப்ரேன்டான Redmi Headphones Neo அறிமுகம் செய்தது
இந்த புதிய ஹெட்போன் 42dB எக்டிவ் நோய்ஸ் கேன்சிலேஷன் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது
இது 72 மணி நேரம் வர பேட்டரி பேக்கப் வழங்குகிறது
Xiaomi யின் சப் ப்ரேன்டான Redmi Headphones Neo அறிமுகம் செய்தது. நிறுவனத்தின் இந்த புதிய ஹெட்போன் 42dB எக்டிவ் நோய்ஸ் கேன்சிலேஷன் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது,மேலும் இது 72 மணி நேரம் வர பேட்டரி பேக்கப் வளங்குகுகிறது, இந்த ஹெட்போனில் மிக சிறந்த ப்ரீமியம் அம்சம் இருக்கிறது மேலும் இதன் விலை மற்றும் பல சுவாரசிய அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.
SurveyRedmi Headphones Neo விலை தகவல்
ரெட்மி நியோ ஹெட்ஃபோன்கள் உள்நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் விலை 349 யுவான் (சுமார் ரூ. 5,000) ஆகும். இவை ஜாஸ் ப்ளூ, சிம்பொனி ஒயிட் மற்றும் ராக் பிளாக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றன. இந்த ஹெட்ஃபோன்களை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து வாங்கலாம் .
Redmi Headphones Neo சிறப்பம்சம்.
Redmi Headphones Neo 40mm டைட்டானியம் டைனமிக் டிரைவர்கள் இடம்பெற்றுள்ளன. இதன் இயர் குஷன்கள் புரோட்டீன் லெதரால் செய்யப்பட்டு, நீண்ட காலப் பயன்பாட்டிற்காக ரீபவுண்ட் ஃபோம் நிரப்பப்பட்டுள்ளன. இயர்கப்கள் 110 டிகிரி ரொடேஷன் மற்றும் 15 டிகிரி சாய்வை வழங்குவதால், வசதியான பொருத்தத்தை உறுதி செய்கின்றன. மெட்டல் ஹெட் பேண்ட் வலிமையையும் வசதியையும் உறுதி செய்கிறது.
இதையும் படிங்க:OnePlus AI ட்ரேன்ஸ்லேஷன் அம்சம் கொண்ட Nord Buds 4 அறிமுகம் 54 மணி நேரம் வரையிலான மிக சிறந்த பேட்டரி பேக்கப்
நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்தச் டிவைஸ்கள் ஒரு தனிப்பட்ட சவுண்ட் சேம்பர் கொண்டுள்ளன, இது தெளிவான மற்றும் கிளியர் சவுண்டை வழங்குகிறது. வயர்ட் ப்ளேபேக் இயக்கத்திற்காக USB ஆடியோ சப்போர்ட் செய்கிறது . அவை 96kHz/24-பிட் லேன்ச்லஸ் குவாலிட்டி மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ சர்டிபிகேஷன் வழங்குகின்றன. நிறுவனம் நான்கு முன்னமைக்கப்பட்ட ஈக்வலைசர் ப்ரோபைல் வழங்கியுள்ளது.
இந்தப் புதிய ஆடியோ டிவைஸ் 42dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியைக் கொண்டுள்ளன. 600mAh பேட்டரியுடன், இவை 72 மணிநேர பேட்டரி பேக்கப்பை வழங்கும். மேலும், இவை குயிக் சார்ஜ் வசதியையும் ஆதரிக்கின்றன. 10 நிமிட சார்ஜ் மூலம் 5 மணிநேர பேட்டரி பேக்கப்பைப் பெறலாம். இந்த ஹெட்ஃபோன்களும் 42dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியைக் கொண்டுள்ளன.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
