WhatsApp யின் மஜாவான அம்சம் எவ்ளோ பெரிய ஸ்டேட்டஸ் 1 நிமிடத்தில் பார்க்கலாம்
WhatsApp அன்றாட வழக்கில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனிவரும் பயன்படுத்தி வருகிறார்கள் , அந்த வகையில் தற்பொழுது வாட்ஸ்அப்பில் நீண்ட வீடியோ ஸ்டேட்டஸ் வைக்க நினைத்தாள் இனி உங்களுக்கு கவலையே இருக்காது இப்போது மெட்டா தனது WhatsApp தளத்தில் ஸ்டேட்டஸ் லிமிட்டை அதிகரிக்கப் போகிறது. இதுவரை தங்கள் வீடியோக்களை துண்டு துண்டாகப் பதிவிட வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர்களுக்கு இது பயனளிக்கும்.மேலும் இதன் பயன் மற்றும் நன்மைகளை முழுசாக பார்க்கலாம் வாங்க.
SurveyWhatApp யில் பெரிய ஸ்டேட்டஸ் எளிதாக வைப்பது
இப்போது உங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் 60 வினாடிகளுக்குப் பதிலாக 90 வினாடி வீடியோவை வைக்க முடியும் . இந்த அம்சம் தற்போது பீட்டா பயனர்களுக்குக் கிடைக்கிறது என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். பீட்டா பயனர்கள் என்பவர்கள் செயலியின் சோதனைப் பதிப்பைப் பயன்படுத்துபவர்களாகக் கருதப்படுவார்கள். எந்தவொரு செயலியின் பீட்டா பதிப்புகளிலும் பிழைகள் இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நிறுவனங்கள் பயனர்களுக்கு முக்கிய பதிப்பை வழங்குகின்றன. பீட்டா பதிப்பில் இந்த அம்சம் வருவதால், இது விரைவில் பொது மக்களுக்கும் கிடைக்கும். வாட்ஸ்அப்பின் வரவிருக்கும் இந்த அம்சம் பற்றிய தகவல் WABetaInfo என்ற நம்பகமான மூலத்திலிருந்து பெறப்பட்டது.
WhatsApp யின் இந்த வெர்சன் பயனர்களுக்கு கிடைக்கும்
இந்த அம்சம் வாட்ஸ்அப்பின் ஆண்ட்ராய்டு பதிப்பு 2.25.12.9 இல் கிடைக்கும் . இந்தப் புதுப்பிப்புக்குப் பிறகு, பயனர்கள் 90 வினாடி வீடியோவை ஒரே நேரத்தில் தங்கள் நிலையில் வைக்க முடியும். கடந்த ஆண்டின் தொடக்கத்தில், 30 வினாடி லிமிட் 1 நிமிடமாக அதிகரிக்கப்பட்டது.
இது எப்படி செய்வது?
- முதலில் இந்த அம்சம் உங்களுக்குக் கிடைக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள நீங்கள் ப்ளே ஸ்டோரில் WhatsApp அப்டேட் செய்ய வேண்டும்.
- ஒரு வேலை உங்களின் WhatsApp அப்டேட் ஆகாமல் இருந்தால் ஆப் அப்டேட் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு ஆப் ஸ்டேட்டஸ் டேபுக்கு சென்று, 90 வினாடி வீடியோவைப் பதிவேற்ற முடியுமா இல்லையா என்பதைப் பார்க்கவும்.
- நீங்கள் பீட்டா பயனராக இருந்தால், ஆண்ட்ராய்டு 2.25.12.9 வெர்சனில் உங்களிடம் இருந்தால், அதில் உள்ள ஆப்பை அப்டேட் செய்யவும்.
- இதற்குப் பிறகு நீங்கள் ஒரு நேரத்தில் 90 வினாடிகள் வீடியோவைப் அப்லோட் செய்ய முடியும்.
இதையும் படிங்க:Tamil New Year 2025: உங்கள் அன்பானவர்களுக்கு தமிழ் புத்தாண்டு WhatsApp யில் வாழ்த்து சொல்லி அசத்துங்க
Sakunthala
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile