வாட்ஸ்அப் வழங்குகிறது 1000GB அல்லி தரும் டேட்டா, எப்படி பெறுவது?

HIGHLIGHTS

போலி தகவல்களை பரப்புவதால், பயனர் விவரம் பறிக்கப்படுவதுடன் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படலாம்

வாட்ஸ்அப்  வழங்குகிறது 1000GB  அல்லி தரும் டேட்டா, எப்படி பெறுவது?

இதுவரை டெலிகாம் நிறுவனங்களே இலவச டேட்டாவை அல்லி தந்து கொண்டு இருந்தது அதனை தொடர்ந்து தற்பொழுது  மற்ற டெலிகாம் மிஞ்சி ஒரு சாதாரண மெசேஜ் செயலியான வாட்ஸ்அப் 1000ஜிபி  டேட்டாவை வழங்குவது  சற்று ஆச்சர்யத்தில் வைக்கவைத்தது.  மேலும் வாட்ஸ்அப் செயலியில் 1000 ஜி.பி. இலவச டேட்டா வழங்கப்படுவதாக மெசேஜ் பரப்பப்படுகிறது. சைபர்செக்யூரிட்டி ஆய்வு நிறுவன ஆராய்ச்சியாளர்களுக்கும் அந்த மெசேஜ் சென்றிருக்கிறது. வைரல் மெசேஜ்கலில் வாட்ஸ்அப் தனது பத்தாவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், வாடிக்கையாளர்களுக்கு 1000 ஜி.பி. இலவச டேட்டா வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த குருந்தகவலை பயனர் விவரங்களை திருடும் கும்பல் உருவாக்கியதாகும். மெசேஜ்களில்  பயன்படுத்தப்பட்டிருக்கும் இன்டர்நெட் முகவரி வாட்ஸ்அப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமானதில்லை. எப்போதும் போல் அதிக சலுகைகள் வழங்குவதாக கூறும் மெசேஜ்களின் போலி வெப்சைட்கள் முகவரிகளே இடம்பெற்றிருக்கும். இவற்றை க்ளிக் செய்தால் மால்வேர் நிறைந்த வெப்சைட் திறக்கும். பயனர்கள் ஒரு க்ளிக் செய்தாலே அவர்களது விவரங்களை அவை பறித்துக் கொள்ளும்.

பெரும்பாலும் இதுபோன்று பரவும் மெசேஜ்கலில் உள்ள இன்டர்நெட் முகவரியை க்ளிக் செய்தால், சில கேள்விகளுக்கு பதில் அளிக்கக் கோரும் வெப்சைட் ஒன்று திறக்கும். இதில் சலுகையை எவ்வாறு தெரிந்து கொள்வது போன்ற கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.

இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது, இதே தகவலை மேலும் 30 பேருக்கு பகிர்ந்து கொண்டால் தான் சலுகையை பெறலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கும். இவ்வாறு வரும் மெசேஜ்களை நம்பி மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம். போலி தகவல்களை பரப்புவதால், பயனர் விவரம் பறிக்கப்படுவதுடன் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படலாம்.

வாட்ஸ்அப்பில் வரும் மெசேஜ்களின் உண்மைத் தன்மையை நன்கு அறிந்த பின்னரே அவற்றை மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டும். போலி தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கவே வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்களை ஃபார்வேர்டு செய்யும் அம்சத்தில் மாற்றம் செய்யப்பட்டு, நாள் ஒன்றுக்கு ஐந்து பேருக்கு மட்டும் ஃபார்வேர்டு செய்யும் வசதி வழங்கப்பட்டது..

இன்டர்நெட் முகவரியை உற்று நோக்க வேண்டியது அவசியமாகும்.சில நிறுவனங்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இதுபோன்ற சலுகைகளை அறிவிக்கலாம் என்ற போதும், இதுபோன்ற தகவல்கள் வரும் போது அதில் வழங்கப்படும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo