WhatsApp Birthday Reminder
WhatsApp தனது கசடமர்களுக்காக ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. மெட்டா நிறுவனம், இந்த மெசேஜிங் ஆப்யில் உள்ளமைக்கப்பட்டBirthday Reminder அம்சத்தை டெஸ்ட்டிங் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த அம்சம் செயல்பாட்டுக்கு வந்தால், உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் பிறந்தநாட்களை நினைவில் வைத்துக்கொள்ள, நீங்கள் ஒரு தனி காலெண்டரையோ அல்லது மூன்றாம் தரப்பு செயலியையோ சார்ந்திருக்க வேண்டியதில்லை.
அறிக்கையின்படி, உங்கள் காண்டேக்டின் பிறந்தநாள் நெருங்கும் போது வாட்ஸ்அப் தானாகவே உங்களுக்கு நினைவூட்டல்களை அனுப்பக்கூடும். இருப்பினும், இந்த அம்சம் தற்போது டெவலப்பர் நிலையில் உள்ளது இந்த அம்சம் எப்படி வேலை செய்யும் என்பதை பார்க்கலாம் வாங்க.
WABetaInfo-வின் அறிக்கை ஒன்றின்படி, வாட்ஸ்அப்பின் சமீபத்திய ஆண்ட்ராய்டு பீட்டா அப்டேட்டில் ஒரு புதிய Birthday Reminder அம்சம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அம்சம், உங்கள் தொடர்புகளின் வரவிருக்கும் பிறந்தநாட்களைக் காண்பிப்பதற்காக செயலியில் ஒரு பிரத்யேகப் பகுதியை உருவாக்கும். மேலும், ஒருவரின் பிறந்தநாளின்போது வாட்ஸ்அப் உங்களுக்கு செயலிக்குள்ளேயே நினைவூட்டல்களை அனுப்பும், இதன்மூலம் நீங்கள் சரியான நேரத்தில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க முடியும்.
இருப்பினும், இந்த அம்சத்தில் ஒரு சிறிய நிபந்தனை உள்ளது. உங்கள் காண்டேக்டின் ஏற்கனவே வாட்ஸ்அப்பில் தங்கள் பிறந்த தேதியைச் சேர்த்திருந்தால் மட்டுமே, நீங்கள் அவர்களுக்கான பிறந்தநாள் நினைவூட்டலைக் (Reminder ) காண்பீர்கள். தற்போது, வாட்ஸ்அப் ஒவ்வொரு நாடு அல்லது தேசத்தில் உள்ள பயனர்களையும் அவர்களின் பிறந்த தேதியை உள்ளிடுமாறு கேட்பதில்லை. எனவே, எல்லாத் தொடர்பாளர்களின் பிறந்தநாள் தகவல்களும் இப்போதைக்குக் கிடைக்காது. இருப்பினும், அதிகமான பயனர்கள் தங்கள் பிறந்த தேதியைச் சேர்க்கும்போது, இந்தப் பிறந்தநாள் பகுதி மேலும் பயனுள்ளதாக மாறும்.
இதையும் படிங்க தூள் கிளப்பும் Jio அம்பானி, வெறும் ரூ,55 யில் 1,000+ Live TV நன்மையுடன் புதிய திட்டம் அறிமுகம்
வாட்ஸ்அப் பிறந்தநாள் விவரங்கள் மீது பயனர்களுக்கு எந்தளவு கட்டுப்பாடு இருக்கும்?
தற்போது, இந்த வாட்ஸ்அப் அம்சம் இன்னும் உருவாக்க நிலையில் உள்ளது. இது பீட்டா சோதனையாளர்களுக்குக் கூட இன்னும் வழங்கப்படவில்லை. உங்கள் பிறந்தநாள் அனைத்துத் தொடர்புகளுக்கும் தெரியுமா அல்லது அதை மறைப்பதற்கான விருப்பம் இருக்குமா என்பதை அந்நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இந்த அம்சத்தை அனைத்துப் பயனர்களுக்கும் வெளியிடுவதற்கு முன்பு, மெட்டா நிறுவனம் சில புதிய பிறந்தநாள் தனியுரிமை விருப்பங்களைச் சேர்க்க வாய்ப்புள்ளது.