வாட்ஸ்அப் க்ரூப் இன்விடேஷன் அம்சம் விரைவில் வருகிறது

HIGHLIGHTS

. வாட்ஸ்அப் க்ரூப் இன்விடேஷன், டார்க் மோட், சாட்களுக்கு பிங்கர்ப்ரின்ட் சென்சார் லாக், தொடர்ச்சியாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதி மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை சரிபார்க்க புதிய வசதி உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கின்றன.

வாட்ஸ்அப் க்ரூப் இன்விடேஷன் அம்சம் விரைவில்  வருகிறது

வாட்ஸ்அப் உலகம் முழுக்க சுமார் 130 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். செயலியின் ஒட்டுமொத்த பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. வாட்ஸ்அப் க்ரூப் இன்விடேஷன், டார்க் மோட், சாட்களுக்கு பிங்கர்ப்ரின்ட் சென்சார் லாக், தொடர்ச்சியாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதி மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை சரிபார்க்க புதிய வசதி உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கின்றன. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இவை தவிர, வாட்ஸ்அப் விரைவில் அட்வான்ஸ்டு சர்ச் மோட் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அம்சம் வாட்ஸ்அப் சர்ச் ஆப்ஷனை தினந்தோரும் பயன்படுத்துவோருக்கு மிக எளிமையான ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. அட்வான்ஸ் சர்ச் அம்சம் மூலம் ஒருவர் அதிகப்படியான குறுந்தகவல்களை தேட முடியும் என கூறப்படுகிறது.

புதிய ஆப்ஷனிற்கென வாட்ஸ்அப் செயலியில் மீடியா எனும் புதிய வசதி சேர்க்கப்படும் என்றும் இதனை கொண்டு பயனர்கள் புகைப்படங்கள், ஜிஃப்கள், வீடியோக்கள், டாக்குமென்ட், லிண்க் மற்றும் ஆடியோ உள்ளிட்டவற்றை தேட முடியும். உதாரணத்திறஅகு வாட்ஸ்அப் மீடியா ஆப்ஷனில் புகைப்படங்களை தேர்வு செய்யும் போது, புகைப்படங்கள் மட்டும் வரிசைப்படுத்தப்படும்.

இதுதவிர மீடியா அபனஷன் வாட்ஸ்அப் ஸ்டோரேஜில் எத்தனை மீடியா ஃபைல்கள் சேமிக்கப்பட்டுள்ளன என்ற விவரங்களும் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இதனுடன் சர்ச் ஹிஸ்ட்ரியை பார்க்கும் வசதியும், தேவைப்படாத சமயங்களில் இதனை நீக்கும் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

வாட்ஸ்அப் சர்ச் ஆப்ஷனில் தேடும் போது பிரீவியூ வழங்கப்படும் என்பதால், பயனர் தேடும் டேட்டாக்களை  மிகச்சரியாக செலக்ட் செய்து பெற முடியும். புதிய அட்வான்ஸ் சர்ச் ஆப்ஷன் தொடர்ந்து உருவாக்கும் பணிகளில் இருப்பதாகவும், விரைவில் இது ஆண்ட்ராய்டு மற்றும் IOS . தளங்களில் கிடைக்கும் என தெரிகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile