வாட்ஸ்அப் IOS ஆப்யில் புது குரூப் காலிங் பட்டன் அறிமுகம்..!

HIGHLIGHTS

புது அப்டேட் வாட்ஸ்அப் ஆப்யில் வாய்ஸ் மெசேஜ்களை தொடர்ச்சியாக பிளே செய்யும் வசதியும் வழங்குகிறது. இந்த வசதிகளை பயன்படுத்த ஐபோனில் IOS . 8.0 அல்லது அதற்கும் அதிக பதிப்புகளை பயன்படுத்த வேண்டும்.

வாட்ஸ்அப் IOS  ஆப்யில் புது  குரூப் காலிங் பட்டன் அறிமுகம்..!

ஐபோன் மாடல்களுக்கான வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியில் க்ரூப் கால்களை எளிமையாக மேற்கொள்ள புது அப்டேட் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட   IOS பீட்டா ஆப்யின் அங்கமாக புது அம்சம் வழங்கப்படுகிறது. இத்துடன் க்ரூப் கால்களை லைவ் நியூ கால் ஸ்கிரீனில் (New Call screen) இருந்து மேற்கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

புது அப்டேட் வாட்ஸ்அப் ஆப்யில் வாய்ஸ் மெசேஜ்களை தொடர்ச்சியாக பிளே செய்யும் வசதியும் வழங்குகிறது. இந்த வசதிகளை பயன்படுத்த ஐபோனில் IOS . 8.0 அல்லது அதற்கும் அதிக பதிப்புகளை பயன்படுத்த வேண்டும். அப்டேட்  செய்யப்பட்ட வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் காலிங் வசதி சாட் விண்டோவை திறக்கும் போது காணப்படுகிறது.

புது மாற்றம் மூலம் க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால்களை மிக எளிமையாக மேற்கொள்ள முடியும். அதற்குரிய ஆப்ஷனை கிளிக் செய்ததும், நீங்கள் கால் செய்ய வேண்டியவர்களை வாட்ஸ்அப் மூலம் தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் வாய்ஸ் கால் அல்லது வீடியோ கால் மேற்கொள்ள வேண்டுமா என்ற ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதில் நீங்கள் விரும்பும் ஆப்ஷனில் ஒன்றை தேர்வு செய்யலாம்.

வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் கால் செய்யும் போது, நீங்கள் அட்ரெஸ் புக்கில் சேமித்து வைத்திருக்கும் எண்களுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும். வாட்ஸ்அப் க்ரூப் கால் செய்ய அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் நீங்கள் துவங்கும் க்ரூப் காலில் மூன்று புது நபர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ள முடியும். 

புது க்ரூப் காலிங் பட்டன் முன்னதாக IOS  பீட்டா 2.18.110.17 வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டது. இந்த பீட்டா அப்டேட் ஐபோன் பயனர்களுக்கு டெஸ்ட்ஃபிளைட் (TestFlight) மூலம் வழங்கப்பட்டது. டெஸ்ட்ஃபிளைட் என்பது, செயலிகளை ஓவர்-தி-ஏர் மூலம் டெஸ்ட் செய்யும் ஆப்பிள் நிறுவனத்தின் சேவையாகும்.

புதிய க்ரூப் காலிங் பட்டன் தவிர IOS வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியில் புதிய க்ரூப் கால் ஷார்ட்கட் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஷார்ட்க்ட் நியூ கால் ஸ்கிரீனில் இடம்பெற்று இருக்கிறது. ஷார்ட்கட் பட்டனை கிளிக் செய்து நேரடியாக க்ரூப் கால் துவங்கி, அதிகபட்சம் மூன்று நபர்களை சேர்த்துக் கொள்ள முடியும்.

IOS இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ள க்ரூப் காலிங் அம்சங்கள் ஆன்ட்ராய்டு தளத்தில் இதுவரை வழங்கப்படவில்லை. க்ரூப் கால் ஷார்ட்கட் வசதி கடந்த மாத ஆன்ட்ராய்டு பீட்டா அப்டேட்டில் வழங்கப்பட்டு இருந்தது. எனினும், ஆன்ட்ராய்டு சாதனங்களுக்கு புது அம்சத்திற்கான பொதுப்படையான அப்டேட் இதுவரை வழங்கப்படவில்லை

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo