ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து வெளியேறும் ட்விட்டர்

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 24 Feb 2018
HIGHLIGHTS
  • ஆப்பிள் மேக் கம்ப்யூட்டர் ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டர் சேவைக்கான சப்போர்ட் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து வெளியேறும் ட்விட்டர்

மேக் கம்ப்யூட்டர் ட்விட்டர் டெஸ்க்டாப் செயலிக்கான சப்போர்ட் நிறுத்தப்படுவதாக ட்விட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டர் நீக்கப்பட்டுள்ளது. 

ட்விட்டர் சேவை வழங்கப்படும் அனைத்து தளங்களிலும் ட்விட்டர் அனுபவத்தை மேம்படுத்தும் பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். அந்த வகையில் இன்று (பிப்ரவரி 16) முதல் மேக் கணினிகளுக்கான ட்விட்டர் செயலியை டவுன்லோடு செய்ய முடியாது என @TwitterSupport ட்வீட்-இல் தெரிவித்துள்ளது. 

மேலும் மேக் கம்ப்யூட்டர்க்கான ட்விட்டர் சப்போர்ட் 30 நாட்களில் நிறைவுறும் என்றும் ட்விட்டர் தெரிவித்துள்ளது. இதனால் மேக் கணினிகளில் ட்விட்டர் சேவையை தொடர்ந்து பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ட்வீட்டெக் (Tweetdeck) போன்ற மூன்றாம் தரப்பு சேவைகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவர்.

மேக் கம்ப்யூட்டரிலிருந்து  ட்விட்டர் நீக்கப்படுவது குறித்த தகவல் வெளியாகும் முன்பு வரை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் ட்விட்டர் app வாடிக்கையாளர்கள் வழங்கும் ரிவியூ 1.7/5 என இருந்தது என கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களிடம் போதிய வரவேற்பு இல்லாததை இது வெளிப்படுத்தி இருக்கிறது.

மேக் செயலியை அப்டேட் செய்வதில் ட்விட்டர் சரியான நுணுக்கங்களை கையாளவில்லை. புதிய அம்சங்கள் அதிகளவு வழங்கப்படாத நிலையில், அக்டோபர் 2015-இல் வழங்கப்பட்ட மொமண்ட்ஸ் அம்சம் ஏழு மாதங்கள் கழித்தே மேக் கம்ப்யூட்டர்க்கு வழங்கப்பட்டது என கூறப்படுகிறது.

logo
Sakunthala

coooollllllllll

email

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
DMCA.com Protection Status